29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
643f8d17 ef72 4de0 b66c 1d2c6632771a S secvpf
சூப் வகைகள்

கேழ்வரகு வெஜிடபிள் சூப்

தேவையான பொருட்கள்:

ராகி மாவு – 2 டீஸ்பூன்
கேரட், கோஸ், பீன்ஸ், பருப்பு – 1 கப்
உப்பு – சுவைக்கு
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி

செய்முறை :

• காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• ராகி மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும்.

• அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

• தண்ணீர் நன்றாக கொதித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து அதில் கரைத்து வைத்துள்ள ராகி மாவை போட்டு கட்டி விழாமல் நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும். ராகி முக்கால் பாகம் வெந்தவுடன் அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைபோட்டு வேக வைக்கவும்.

• கடைசியாக உப்பு, மிளகு தூள் தூவி இறக்கவும்.

• இதை காலையில் உணவாகவும், இரவு உணவாகவும் சாப்பிடலாம். உடலுக்கும் மிகவும் நல்லது. சற்று தண்ணீராக இருந்தால் தான் இது நன்றாக இருக்கும்.

643f8d17 ef72 4de0 b66c 1d2c6632771a S secvpf

Related posts

சூப்பரான உடுப்பி தக்காளி ரசம்

nathan

மான்ச்சூ சூப்

nathan

வொண்டர் சூப்

nathan

வெற்றிலையில் நெல்லி ரசம் எப்ப‍டி வைப்ப‍து?…

sangika

காய்கறி சூப்

nathan

ஓட்ஸ் பீநட் பட்டர் சூப்

nathan

முருங்கை கீரை சூப் செய்ய…

nathan

லென்ட்டில் - லீக்ஸ் சூப்

nathan

கேரட், சோயா சூப்

nathan