25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
ld4048
முகப் பராமரிப்பு

வேனிட்டி பாக்ஸ்: சிவப்பழகு

வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ என்கிற காமெடி வசனம், படத்தலைப்பாகவே வரும் அளவுக்கு நம் சமூகத்தில் நிறவெறி ஊறிக்கிடக்கிறது. அழகாக இருப்பது அடுத்தது. அதற்கு முன் சிவப்பாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறவர்களே அதிகம். சிவந்த நிறம் கொண்டவர்களுக்கு நம் சமூகத்தில் கொடுக்கப்படுகிற மதிப்பும் தனிதான். நிறத்தை மேம்படுத்திக் கொள்ள, `சிவாஜி’ பட ரஜினி ஸ்டைலில் எதையும் முயற்சித்துப் பார்க்கத் தயங்குவதில்லை சிலர்.

உண்மையில் சருமத்தின் நிறம் என்பது நாம் கருவாக உருவாகும் போதே தீர்மானிக்கப்படுகிற ஒன்று. அதை மாற்றுகிற மேஜிக் இன்னும் வரவில்லை” என்கிறார் அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக். சிவப்பழகுத் தகவல்களைத் தருவதுடன், செயற்கையாக நிறம் கூட்டும் சிகிச்சைகள் மற்றும் அழகு சாதனங்களின் பின்னணியில் மறைந்திருக்கும் பயங்கரங்கள் பற்றியும் பகிரங்கமாகப் பேசுகிறார் அவர்.

ஒருவருடைய நிறத்தை அவரது உடலில் உள்ள மெலனோசைட்ஸ் உற்பத்தி செய்கிற மெலனின் என்ற நிறமிகள்தான் நிர்ணயம் செய்கின்றன. மெலனின் சுரப்பு அதிகமாக இருந்தால் கருப்பாக இருப்பார்கள். மெலனின் சுரப்பு குறைய குறைய நிறம் வெளுத்து காணப்படும். மெலனினே இல்லாத நிலைக்கு ‘அல்புனிஸம்’ என்று பெயர். வெண்குஷ்டம் போன்ற நிலை இதுதான்.’சிவப்பாக இல்லையே’ என்று வருத்தப்படும் மக்களுக்கு ஒரு நற்செய்தி.

மெலனின் அதிகமாக உள்ள சருமத்தில் எந்த ஒரு பிரச்னையும் ஏற்படாது. சருமத்தில் துர்நாற்றம் கூட ஏற்படாது. சூரிய ஒளியில் நம் சருமம் வெளிப்படும்போது சூரிய ஒளி சருமத்தில் ஊடுருவி நம்முடைய மெலனோசைட்டுகளுக்கு தூண்டுதல் ஏற்பட்டு அதனால் மெலனின் உற்பத்தி அதிகமாகும். அதனால் நம் சருமம் கருக்கும். முன்பெல்லாம் சருமம் பளிச்சிட ராஜா-ராணி காலத்திலேயே நிறைய முயற்சி செய்திருக்கிறார்கள்.

ஐரோப்பிய ராணிகள் பல மூலிகைகள், மலர்களை அரைத்து மேல் பூச்சாக பூசினார்கள். கிளியோபாட்ரா நிறம் மேம்பட மற்றும் பொலிவுபட, நல் முத்துகளைப் பொடித்து அத்துடன் கழுதைப்பாலும் தேனும் கலந்து உடலில் பூசி குளித்தாள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதன் பின்னரும் பல்வேறு காலகட்டங்களில் முக சிவப்புக்கும் அழகுக்கும் பல்வேறு முயற்சிகள் பின்பற்றப்பட்டன.

இப்போது சிவப்பழகைப் பெற கெமிக்கல் கலந்த கிரீம் மற்றும் சோப்பு பயன்படுத்துவது, பியூட்டி பார்லர்களில் பிளீச்சிங், ஃபேஷியல் செய்து கொள்வது, மருத்துவமுறையில் கெமிக்கல் பீலீங்க்ஸ் மற்றும் டெர்மாப்ரேஷன் செய்து கொள்வது என என்னவெல்லாமோ முயற்சிக்கிறார்கள். நம்முடைய நிறம் என்பது மரபணு சார்ந்தது.கருப்பான நிறத்தை ஓரளவு பளிச்சிட வைத்தல்தான் சாத்தியமே தவிர வெளுத்தல் என்பது சாத்தியம் இல்லை! சிவப்பழகுக்கு செய்யப்படும் சிகிச்சைகளில் உள்ள முக்கிய மூலப்பொருட்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

1. ஹைட்ரோகுய்னான் (Hydroquinone)

இந்தியாவில் பெரும்பான்மையான ஸ்கின் லைட்டனிங் சிகிச்சைகளில் இது உபயோகப்படுத்தப்படுகிறது. இது ஒரு பிளீச்சிங் ஏஜென்ட் ஆகவே கருதப்படுகிறது. இது ஜப்பான், ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது. இதை மருத்துவ ஆலோசனையின்றி வருடக்கணக்கில் உபயோகப்படுத்தினால் Ochronosis என்ற மிகக் கருமையான நிலை சருமத்துக்கு வரலாம்.

2. கோஜிக் ஆசிட் (Kojic Acid)

இந்த கோஜிக் ஆசிட் காளான்களிடமிருந்து பெறப்படுகிறது. நம்முடைய சருமத்தின் மேல் அடுக்கான எபிடெர்மிஸின் மேலே உள்ள stratum corneum வரை மெலனின் வராமல் தடுப்பதால் முகம் கருப்பதை தவிர்க்க முடியும். கோஜிக் ஆசிட்டில்
வைட்டமின் சி உள்ளது.

3. ரெட்டினாய்க் ஆசிட் (Retinoic Acid)

வைட்டமின் ஏ உள்ள இந்த மூலப்பொருள் நம்முடைய சருமத்தில் உள்ள மேல்புற லேயர்களை உரிக்கும் திறன் வாய்ந்தது. மேலே இருக்கக்கூடிய கருப்பு நிற சரும செல்கள் வெளியேறி அடியில் இருக்கக்கூடிய வெளிறிய சருமம் மேலே வந்து சற்று வெளுப்பாக தெரிவார்கள். பெரும்பான்மையான மருத்துவர்கள் இந்த ரெட்டினாய்க் ஆசிட் உடன் ஹைட்ரோகுய்னான் மற்றும் ஸ்டீராய்டு கிரீம் கலந்து சிவப்பழகு சிகிச்சைக்கு உபயோகப்படுத்துவார்கள். இது சில வேளைகளில் சருமத்தை பாதிக்கலாம். அளவுக்கு அதிகமாக உபயோகப்படுத்தினால் சருமம் வெந்து சிவந்து போகவும் வாய்ப்புகள் உண்டு.

4. வைட்டமின் சி அல்லது அஸ்கார்பிக் ஆசிட் (Ascorbic Acid)

சிட்ரஸ் பழங்களில் மிகுந்துள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் மூலக்கூறுகளை கொண்டு சருமத்துக்கு சிவப்பழகு கொண்டு வருவதற்கு உபயோகிக்கப்படுகிறது. சென்சிட்டிவான சருமத்துக்கு இது உகந்தது அல்ல.

5. லாக்டிக் ஆசிட் (Lactic Acid)

பால் மற்றும் தயிரில் உள்ள லாக்டிக் ஆசிட் கொண்டு சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்பட்டு, சரும நிறத்தை மேம்படுத்திக் காட்ட இது உதவும். இது ஆபத்தில்லாத சிகிச்சை. இதனால் சருமத்தில் ஆரோக்கியமான புதிய மெலனின் இல்லாத செல்கள் உண்டாகி, சருமத்துக்கு பளிச்சென்ற தோற்றம் கொடுக்கும்.

6. ஆர்புடின் (Arbutin)

இதுவும் ஆரோக்கியமான, அதிக பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சை. பெரிஸ் (berries) என்று சொல்லப்படும், ஸ்ட்ராபெர்ரி, மல்பெர்ரி, பியர்பெர்ரி, பிளாக்பெர்ரியிலிருந்து எடுக்கப்படும் ஆர்புடின் மூலக்கூறுகள் சிவப்பு நிறம் மேம்பட உபயோகப்படுத்தப்படுகிறது. இவை அடங்கிய சிகிச்சைகளுக்கு மிகவும் அதிக கட்டணம் கொண்டவை.பொதுவாக சிவப்பழகு சாதனத் தயாரிப்புகளில் கடுமையான பிளீச்சிங் ஏஜென்ட்டுகள் உள்ளன. அவை மட்டுமே சருமத்தை வெளுப்பாக்க முடியும் என்பதால் உபயோகப்படுத்தப்படுகின்றன.

சில கிரீம்களில் சருமத்தை வெளுப்பாக்கச் செய்கிற ஸ்டீராய்டுகள் இருப்பதால் அவை மெலனின் சுரப்பையே தடை செய்யக்கூடிய ஆற்றல் மிக்கவை. இதனால் சருமம் வெளுப்பாகலாம். ஆனால், மிகக்கடுமையான பக்க விளைவுகள் ஏற்படும். சிவப்பழகு சாதனத் தயாரிப்புகளில் சேர்க்கப்படுகிற இதர ரசாயனங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள், இயற்கையான முறையில் சரும நிறத்தை மேம்படுத்தும் வழிகள் என சிவப்பழகுத் தகவல்கள் அடுத்த இதழிலும் தொடரும்.
ld4048

Related posts

முயன்று பாருங்கள், முகம் பளிச் ஆக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

nathan

கருப்பா பொலிவிழந்து இருக்கும் முகத்தை பிரகாசமாக்க வேண்டுமா? இதோ அதற்கான சில டிப்ஸ்…

nathan

வீட்டிலேயே ஃப்ரூட் பேசியல் செய்வது எப்படி?

nathan

முகப்பரு இருக்கும் போது பேசியல் செய்யலாமா?

nathan

முகத்தில் முடிகளை நீக்க வேண்டுமா?

nathan

கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையங்கள் உடனே மறைய

nathan

முகத்துக்கு ஆவி பிடிக்கும் முறை..

nathan

Super tips.. சாருமத்தை அழகு படுத்த ஒரு சிறந்த இயற்கையான முறை!

nathan

கண் சுருக்கங்களைப் போக்கி வசீகரமாக்கும் அற்புத எண்ணெய்கள்!!

nathan