25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
31 1441003919 6 aloevera
சரும பராமரிப்பு

கற்றாழை ஜெல் எப்படி சரும அழகை அதிகரிக்க உதவுகிறது?

நம் அழகை அதிகரிக்க எத்தனையோ பொருட்களைக் கொண்டு பராமரிப்புக்களை மேற்கொள்வோம். அப்படி பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் கற்றாழை ஜெல். அழகை அதிகரிக்க வீட்டிலேயே போடப்படும் ஒவ்வொரு ஃபேஸ் பேக்கிலும் கற்றாழை ஜெல் முக்கிய பங்கினை வகிக்கிறது.

இதற்கு அதில் உள்ள சத்துக்கள் மட்டுமின்றி, கற்றாழை பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வைத் தருகிறது. மேலும் கற்றாழை சருமத்தின் இளமையைப் பாதுகாக்கிறது. சரும மருத்துவர்கள் கூட, சரும பிரச்சனைகளுக்கு கற்றாழை ஜெல்லைப் பரிந்துரைப்பார்கள்.

சரி, இப்போது கற்றாழை ஜெல்லை சருமத்திற்கு பயன்படுத்தினால் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

சரும சுருக்கங்கள்

கற்றாழையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளதால், இதனை சருமத்தில் பயன்படுத்தும் போது, அது சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைத் தடுத்து, சருமத்தை இளமையுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. சொல்லப்போனால், நம் சருமத்திற்கு பயன்படுத்தும் ஆன்டி-ஏஜிங் க்ரீம்களில் கூட கற்றாழை ஜெல் பயன்படுத்தப் பட்டிருக்கும்.

பொலிவு

கற்றாழை அடிப்படையில் ஓர் நல்ல கிளின்சர். இதனை சருமத்தில் பயன்படுத்தும் போது, சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் போன்றவை நீங்கி, முகம் பொலிவோடு மின்னும்.

முகப்பரு

கற்றாழையில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் தன்மை, முகப்பருக்களைப் போக்க உதவும். எப்போது பாக்டீரியாக்களையும், பூஞ்சைகளையும் கட்டுப்பாட்டுடன் வைக்கிறோமோ, அப்போது முகப்பருக்களையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

மாய்ஸ்சுரைசர்

கற்றாழை நல்ல மாய்ஸ்சுரைசராகவும் செயல்படும். எனவே இதனை தினமும் சருமத்தில் தடவி வந்தால், சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ளலாம்.

கரும்புள்ளிகள்

கற்றாழை ஜெல்லை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், முகத்தில் உள்ள நீங்கா கரும்புள்ளிகளைப் போக்கலாம்.

ஃபேஸ் பேக்

கற்றாழை ஜெல்லில் சருமத்திற்கு தேவையான சத்துக்கள் இருப்பதால், இவை பல்வேறு ஃபேஸ் பேக்குகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் கற்றாழை சேர்த்துள்ள ஃபேஸ் பேக்குகள் சருமத்தை ஆரோக்கியத்துடனும், பிரச்சனையின்றி பாதுகாப்புடனும் வைத்துக் கொள்கிறது.

31 1441003919 6 aloevera

Related posts

உங்களுக்கு தெரியுமா உச்சி முதல் பாதம் வரை அழகாக்க இந்த ஒரே பூ போதும்!

nathan

உள்ளங்கால் ரொம்ப அரிக்குதா? அப்ப இத படிங்க!

nathan

ஸ்ட்ராபெர்ரியும் தயிரும் உங்கள் முகத்திற்கு என்ன செய்யும்?

nathan

க்ரீன் டீ குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்.

nathan

இதெல்லாம் செய்தால்…. அழகு வரும்… அவர் சொல்வது சரிதானே!

sangika

தெரிந்துகொள்வோமா? சருமத்தில் எக்ஸிமா பிரச்சனையிருந்தால் இத ட்ரை பண்ணிப்பாருங்க!

nathan

ஆன்ட்டி ஏஜிங் அழகு சாதனங்கள்

nathan

வறட்சியான சருமம் உள்ளவர்கள் தினமும் செய்யக்கூடாத விஷயங்கள்!

nathan

குளிர்காலத்தில் ஏற்படும் சரும பாதிப்பை தடுக்கும் வழிகள்

nathan