28 1456654871 5 banana
இளமையாக இருக்க

நீங்க நீண்ட நாள் இளமையா இருக்கணுமா? அப்ப இந்த பழங்களை அதிகம் சாப்பிடுங்க…

மூப்படைதல் என்பது தடுக்க முடியாத ஓர் செயல்முறையாகும். நாம் நினைத்தாலும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அச்செயலை ஒருசில உணவுப் பொருட்கள் செய்யும். குறிப்பாக பழங்கள் அச்செயலை நன்கு செய்யும்.மூப்படைதல் என்பது தடுக்க முடியாத ஓர் செயல்முறையாகும். நாம் நினைத்தாலும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அச்செயலை ஒருசில உணவுப் பொருட்கள் செய்யும். குறிப்பாக பழங்கள் அச்செயலை நன்கு செய்யும். ஏனெனில் ஒருசில பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்டடுகள் அதிகம் உள்ளது. இது சரும செல்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கி, சரும பிரச்சனைகள் மற்றும் மூப்படைதலுக்கான அறிகுறிகள் வராதவாறு செய்யும்.

ஏனெனில் ஒருசில பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்டடுகள் அதிகம் உள்ளது. இது சரும செல்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கி, சரும பிரச்சனைகள் மற்றும் மூப்படைதலுக்கான அறிகுறிகள் வராதவாறு செய்யும்.

இங்கு அப்படி சரும அழகையும், இளமையையும் நீண்ட நாட்கள் தக்க வைக்க உதவும் பழங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை அடிக்கடி உட்கொண்டு வந்தால், இளமையுடன் ஜொலிக்கலாம்.

கிவி

கிவி பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது சரும சுருக்கம் மற்றும் முதுமைக் கோடுகள் வருவதை தாமதமாக்கும். மேலும் இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஈ, ப்ரீ ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும்.

மாதுளை

மாதுளையில் உள்ள வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இப்பழம் சரும செல்களுக்கு போதிய சத்துக்களை வழங்கி, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, இளமையைத் தக்க வைக்கும்.

தர்பூசணி

தர்பூசணியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்திற்கு மிகவும் அத்தியாவசியமானவை. இப்பழத்தை உட்கொண்டால், சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கப்படும். தர்பூசணியின் விதையிலும் சருமத்திற்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது.

அவகேடோ

அவகேடோ பழத்தில் வைட்டமின் ஈ மற்றும் பி உள்ளது. இது சருமத்திற்கு மிகவும் இன்றியமையாதவை. மேலும் இதில் உள்ள பொட்டாசியம் உடலில் நீர்ச்சத்துக்களின் அளவைப் பராமரிக்கும். இப்பழத்தில் உள்ள க்ளூட்டாதியோனைன் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கம் மற்றும் மூப்படைதலுக்கான செயல்பாட்டைத் தள்ளிப் போடும். எனவே இப்பழ மில்க் ஷேக்கை தினமும் குடித்து வர, முதுமையைத் தள்ளிப் போடலாம்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் பி 6 சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை சீராக்கும். இதில் உள்ள மாங்கனீசு மற்றும் இதர ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்திற்கு போதிய நீர்ச்சத்தை வழங்கும் மற்றும் சருமத்தில் சுருக்கங்கள், முதுமைக் கோடுகள் வருவதைத் தடுக்கும்.

திராட்சை

திராட்சையில் புறஊதாக்கதிர்களின் தாக்கத்தை எதிர்த்துப் போராடும் வைட்டமின் சி மற்றும் மாங்கனீசு உள்ளது. இப்பழத்தினை தினமும் உட்கொண்டு வந்தால், சருமத்தின் பொலிவு அதிகரித்து, முதுமைத் தோற்றம் தடுக்கப்படும்.

28 1456654871 5 banana

Related posts

30 களில் இளமையாக இருக்க என்ன சாப்பிடலாம்?

nathan

முதுமையை தடுக்கும் ஆலிவ் ஆயில்

nathan

40 வயதினிலே… பின்பற்ற வேண்டிய ஆரோக்கிய வாழ்க்கை முறை!

nathan

உங்கள் சருமத்தை இளமையாக வைத்திருக்கும் இயற்கை மூலிகைகள்

nathan

40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான‌ 10 மிக முக்கியமான வைட்டமின்கள்,beauty tips only tamil,tamil beauty tips in tamil

nathan

சைக்கிள் ஓட்டினால் இளமையாகத் தெரிவோம்!

nathan

தினமும் மதியம் குட்டித் தூக்கம் போட்டா… உங்க அழகை அதிகரிக்கலாம்!

nathan

வயதான தோற்றத்தை போக்கவேண்டுமா??இத ட்ரை பண்ணுங்க நிச்சயம் பலன்!!

nathan

சீக்கிரமே வயதான தோற்றம் வந்துவிட்டதா? இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க!

nathan