28.9 C
Chennai
Thursday, Jul 3, 2025
how to make nutritious tasty Broccoli poriyal
சைவம்

ப்ரோக்கோலி பொரியல்

தேவையான பொருட்கள்

ப்ரோக்கோலி – 1
பெரிய வெங்காயம் – 1
இஞ்சி – சிறிது
பூண்டு – 5 பல்
வரமிளகாய் – 2
கொத்தமல்லி தழை – சிறிது
உப்பு – தேவைக்கு

தாளிக்க :

கடுகு – சிறிது
கடலைப்பருப்பு – ஒரு மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு – ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் – தாளிக்க

செய்முறை :

• முதலில் ப்ரோக்கோலியை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.

• மிளகாயை இரண்டாக கிள்ளிக் கொள்ளவும்.

• வெங்காயம் மற்றும் கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• இஞ்சி மற்றும் பூண்டை நசுக்கிக் கொள்ளவும்.

• ப்ரோக்கோலியை ஐந்து நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

• ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து மிளகாய், இஞ்சி, பூண்டு மற்றும் சிறிது கொத்தமல்லித் தழையை போட்டு வதக்கவும்

• நன்கு வதங்கியதும் வெங்காயம் மற்றும் சிறிது உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

• பிறகு வேக வைத்த ப்ரோக்கோலியை போட்டு தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடம் பிரட்டி எடுக்கவும்.

• சுவையான சத்தான பொரியல் ரெடி.how to make nutritious tasty Broccoli poriyal

Related posts

உருளை கிழங்கு பொரியல்,–சமையல் குறிப்புகள்

nathan

சப்பாத்திக்கு சூப்பரான பன்னீர் குருமா

nathan

பேச்சுலர்களுக்கான… பீட்ரூட் பொரியல்

nathan

கலவை காய்கறி மசாலா

nathan

உருளைகிழங்கு ரய்தா

nathan

சுவையான குடைமிளகாய் காளான் மிளகு வறுவல்

nathan

பரோட்டா!

nathan

புளியோதரை

nathan

காய்கறி கதம்ப சாதம்

nathan