25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
21 1440145320 6 wig
ஆண்களுக்கு

ஆண்கள் எப்படியெல்லாம் தங்களின் வழுக்கைத் தலையை மறைக்கலாம்?

தற்போது வழுக்கைத் தலை என்பது சாதாரணமான ஒன்றாகிவிட்டதோடு, ஃபேஷனாகியும் விட்டது. ஆம், இன்றைய ஆண்களுக்கு இளம் வயதிலேயே முடி அதிகம் கொட்டி, அதனால் விரைவிலேயே வழுக்கை ஏற்பட்டுவிடுகிறது. ஆகவே ஆண்கள் பலரும் தங்களின் முடிக்கு அதிக பராமரிப்புக்களைக் கொடுத்து வருகின்றனர்.

இருப்பினும், அதையும் மீறி சிலருக்கு வழுக்கை ஏற்பட்டுவிடுகிறது. இதற்கு அவர்களின் ஜீன்கள் தான் காரணம். உங்கள் பரம்பரையில் யாருக்கேனும் விரைவில் வழுக்கை விழுந்திருந்தால், உங்களுக்கும் வழுக்கை விரைவில் ஏற்படக்கூடும். அப்படி உங்களுக்கு வழுக்கை விழுந்தால், அதனை மறைக்க ஒருசில வழிகளை தமிழ் போல்ட்ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் பார்ப்போமா!!!

கைத்தேர்ந்த சிகைஒப்பனையாளர்

உங்களுக்கு வழுக்கை ஏற்பட ஆரம்பித்தால், கைத்தேர்ந்த சிகை ஒப்பனையாளரை சந்தித்து, அவர்களின் பரிந்துரையின் பேரில் நடந்து கொள்ளுங்கள். ஏனெனில் சிகை ஒப்பனையாளருக்கு உள்ள அனுபவத்தால், நிச்சயம் உங்களுக்கு ஏதேனும் ஒரு நல்ல வழியைக் காட்ட முடியும். எனவே அவர்கள் சொல்வதை தவறாமல் பின்பற்றி உங்கள் வழுக்கைத் தலையை மறைத்துக் கொள்ளுங்கள்.

மொட்டை

உங்கள் தலையில் ஆங்காங்கு மட்டும் முடி இருப்பதைப் பார்க்க உங்களுக்கு கஷ்டமாக இருந்தால், மொட்டை அடித்துக் கொள்ளுங்கள். மேலும் தற்போது மொட்டைத் தலையுடன் ஆண்கள் இருப்பது ஃபேஷனும் கூட. எனவே அவ்வப்போது உங்கள் தலையை ஷேவ் செய்து, மொட்டைத் தலையுடன் சுற்றுங்கள்.

தொப்பி

தலையில் முடி இருக்கும் போது தொப்பியைப் பயன்படுத்துவது தான் நல்லதல்ல. ஆனால் முடியே இல்லாதபோது தலைக்கு தொப்பி பயன்படுத்துவதில் எந்த ஒரு தவறும் இல்லை. மேலும் தற்போது வழுக்கைத் தலையுள்ள 100 பேரில் 80 பேர் தொப்பியுடன் தான் சுற்றுகிறார்கள். எனவே உங்களுக்கு பொருந்தமாக உள்ள மற்றும் ஸ்டைலான தோற்றத்தைத் தருமாறான தொப்பியை வாங்கிப் பயன்படுத்தி, உங்கள் வழுக்கைத் தலையை மறைத்துக் கொள்ளுங்கள்.

உச்சந்தலையில் நிறமூட்டல் (Scalp Pigmentation)

இந்த முறை மிகவும் விலை அதிகம் கொண்ட செயல்முறை தான் உச்சந்தலையில் நிறமூட்டல். வழுக்கைத் தலையுள்ள பல்வேறு பிரபலங்களும் இந்த செயல்முறையைப் பின்பற்றுகின்றனர். இந்த முறை உலகின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்படுகிறது. எனவே சரியான இடத்தைத் தேடி கண்டுப்பிடித்து பின்பற்றுங்கள்.

முடி மாற்றம் (Hair Transplants)

இது வழுக்கைத் தலையை மறைப்பதற்கு எளிதில் கிடைக்கும் ஓர் சிகிச்சை. இந்த சிகிச்சை சற்று விலை அதிகமானது மட்டுமின்றி, கடுமையான வலியைத் தரக்கூடியதும் கூட. இதனால் தலையில் தழும்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும் பல ஆண்கள் இதனை தேர்வு செய்கின்றனர். உங்களுக்கு விருப்பமிருந்தால், இதனை நீங்கள் மேற்கொள்ளலாம்.

தலையில் விக் பயன்படுத்தலாம்

கடைசியாக மேற்கூறிய வழிகள் எதுவும் உங்களுக்கு பொருந்தாவிட்டால், கடைசியில் தலைக்கு விக்கை பயன்படுத்தி தான் ஆக வேண்டும். ஆனால் அப்படி தலைக்கு விக் பயன்படுத்துவதாக இருந்தால், உங்களுக்கு பொருத்தமாக உள்ளதைப் பார்த்து பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால் அது நீங்கள் விக் வைத்துள்ளீர்கள் என்பதை நன்கு வெளிக்காட்டிவிடும்.

21 1440145320 6 wig

Related posts

முகத்தில் உள்ள கருமையை நீக்க இனி கிரீம்கள் தேவையில்லை….

sangika

ஆண்களின் ஆளுமையை கூட்டும் பிளாட்டின நகைகள்

nathan

ஆண் தன்னுடைய வாழ்க்கைத்துணையிடம் சொல்ல விரும்புகிறான் !..

sangika

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பாதிப்பு வயிற்றில் உள்ள சிசுவை பாதிக்குமா? : தெரிந்துக் கொள்ளுங்கள்…! ஆ…

nathan

சிகரெட் பிடிச்சு உதடு ரொம்ப கருப்பா இருக்கா?

nathan

வெட் ஷேவிங் Vs ட்ரை ஷேவிங்: நன்மைகளும்… தீமைகளும்…

nathan

ஆண்களுக்கான சில எளிய அழகுக்குறிப்புகள்!…..

sangika

ஆண்களுக்கு சொட்டை விழுவதற்கான காரணங்கள் இவைதான் !!

nathan

இந்திய ஆண்கள் தங்களின் அழகை அதிகரிக்க தவறாமல் மேற்கொள்ள வேண்டியவைகள்!!!

nathan