29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
03 1438602736 12bizarrefactsyouneverknewaboutbodyhair
தலைமுடி சிகிச்சை

தேகத்தில் வளரும் கேசத்தை பற்றிய சில வினோதமான தகவல்கள்!!!

நமது தலையில் வளர்வது போலவே முகத்திலும், முகத்தில் வளர்வது போலவே உடலிலும் கேசம் வளர்வது கிடையாது. நிறைய வேறுபாடுகள் உண்டு. நாம் இறந்த பிறகும் நமது உடலில் வளரும் ஒரே பகுதி முடி தான். மதுரம் நமது உடலிலேயே வேகமாக வளரும் பகுதியும் முடி தான். இது போல நிறைய சுவாரஸ்யங்களை தன்னுள் கொண்டுள்ளது நமது தேகத்தில் வளரும் கேசம். அதைப்பற்றி தான் நாம் இனி இங்கு காணவுள்ளோம்….

புருவங்களில் வாழ்ந்து சருமத்தை உண்ணும் உயிரணு

நமது புருவங்களில் சில நுண்ணிய பூச்சிகள் வளர்கிறது. இது நமது புருவத்தில் இருந்தவாறே நமது சரும செல்களை உணவாக உண்டு வாழ்ந்து வருகிறதாம்.

போனி டெயில் (Ponytail)

போனி டெயில், பெண்களுக்கு மிகவும் பிடித்த கூந்தல் அலங்காரம். பெண்கள் தனது கூந்தலை முன்னும், பின்னும் முன் இழுத்து, இழுத்து விளையாடுவது வழக்கம். ஆனால், இதை தொடர்ந்து செய்துவந்தால், பெண்களுக்கு முடி உடைத்தாலும், வழுக்கை விழவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறார்கள்.

சவரம்

உங்கள் தேகத்தின் கேசத்தை நீங்கள் சவரம் செய்த ஓரிரு வாரங்கள் கழித்து முடி திரும்பவம் வளர ஆரம்பிக்கிறது. இது, ஒவ்வொரு உடல் பகுதிக்கும் வேறுப்படும்.

பிறப்புறுப்பு பகுதியில் காயம்

நிறைய பேருக்கு பிறப்புறுப்பு பகுதியில் முடியை சவரம் செய்யும் போது காயம் ஏற்பட்டு விடும். ஆனால், இதற்காக யாரும் அதிகம் மருத்துவரிடம் செல்வதில்லை. இதற்கு காரணம் அவர்களது தயக்கமும், கூச்சமும் தான். ஓர் காயத்திற்காக மருத்துவரை காண மக்கள் மறுப்பது இதற்காக மட்டும் தான்.

உடலில் வேகமாக வளரும் பகுதி

நமது உடலில் மிக வேகமாக வளரும் திசுவாக கருதப்படுகிறது தேகத்தின் கேசம்.

இறந்த பிறகும் வளரும்

நாம் இறந்த பிறகும் கூட வளரும் தன்மை கொண்டது கேசம். இது மட்டுமல்லாது நமது கை, கால் நகங்களும் கூட இறந்த பிறகும் வளரும் என்கின்றனர். ஏனெனில், இவை இரண்டுமே, நமது உடலில் இருந்து வெளிப்படும் ஒரு வகையான அழுக்கு.

கூந்தலை பிடுங்க கூடிய வினோத நோய்

” Trichotillomania” – தலை முடியைப் பிய்த்துக் கொள்ள இயற்கைக்கு மீறிய ஆவல் என இந்த நோயை கூறுகின்றனர். உலக மக்கள் தொகையில் 2-4% மக்களுக்கு இந்த நோய் தாக்கம் இருக்குமாம்.

முடிக்கு பதிலாக நகம் வளரும் நோய்

பெயரிடப்படாத ஓர் நோய் இருக்கிறதாம். அது, நமது விரல்களில் நகம் வளர்வது போலவே, தலையில் முடி வளராமல், அதற்கு பதிலாக நகம் போல வளர செய்யும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்கிறார்கள்.

மார்பகத்தில் முடி வளர்வது

பலரும் பெண்களுக்கு மார்பக முலைகளில் முடி வளர்வதை அதிசயமாக பார்க்கின்றனர். ஆனால், இது மிகவும் இயல்பானது மற்றும் இயற்கையானது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

விரைவாக உதிர்ந்துவிடும்

நமது தாடி, தலைமுடியோடு ஒப்பிடுகையில், தேகத்தில் வளரும் கேசம் தான் மிக விரைவாக உதிரும் தன்மையுடையது ஆகும்.

மூக்கில் முடி வளர்ச்சியின்மை

மூக்கில் முடி வளர்ச்சி இல்லாதவர்களுக்கு தான் வேகமாக நோய் தாக்கம் ஏற்படுகிறதாம்.

ஓநாய் நோய் (Hypertrichosis)

உடலெங்கும் அளவுக்கு அதிகமாக கேசத்தின் வளர்ச்சி ஏற்படுத்தும் தாக்கம் கொண்டுள்ளது தான் ஓநாய் நோய் (Hypertrichosis).

03 1438602736 12bizarrefactsyouneverknewaboutbodyhair

Related posts

கூந்தலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்க மருதாணி மட்டும் போதும்!….

nathan

நரை முடியை கறுப்பாக்க – grey hair a thing the past after

nathan

தினமும் கூந்தலுக்கு எண்ணெய் தடவ வேண்டுமா?

nathan

முடி உதிர்தல், பொடுகு செய்ய வேண்டியவைகள்

nathan

உங்க முடி பறவைக்கூடு மாதிரி அசிங்கமா இருக்கா?

nathan

உங்களுக்கு தெரியுமா வெள்ளை முடியை கொஞ்சம் கொஞ்சமாக கருமையாக்கும் ப்ளாக் டீ!

nathan

கூந்தல் உதிர்வை தடுக்க இரவில் செய்ய வேண்டியவை

nathan

தலைமுடி பிரச்சனைகளைப் போக்க வேப்பிலையைப் பயன்படுத்துவது எப்படி?hair tips in tamil

nathan

கூந்தல் உதிர்வை தடுக்கும் எளிய வழிமுறைகள்

nathan