27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025
de88074d f0e1 4d46 b813 0dbf0860a8c4 S secvpf1
முகப் பராமரிப்பு

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கும் வீட்டு வைத்தியம்

ஒருவரின் அழகை முகப்பருக்கள் மட்டுமின்றி, கருமையான சிறுசிறு புள்ளிகளும், தழும்புகளும் தான் கெடுக்கின்றன. இந்த கருமையான சிறுசிறு புள்ளிகளானது அதிகமாக வெயிலில் சுற்றுவது, கெமிக்கல், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, வைட்டமின் குறைபாடு, மாசுபாடு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்றவைகளால் ஏற்படும். இவற்றை எளிமையான சில இயற்கை வழிகளின் மூலம் போக்க முடியும்.

* கற்றாழை ஜெல்லை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வர, முகத்தில் உள்ள கருமை படிப்படியாக முற்றிலும் அகலும்.

* முட்டையின் வெள்ளைக்கருவுடன் தயிரை சேர்த்து நன்கு அடித்து, அவற்றை முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி இரண்டு வாரத்திற்கு ஒருமுறை செய்து வர, முகத்தில் இருக்கும் கருமை நீங்கும்.

* வெந்தயக் கீரையை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடியோ அல்லது வாரம் 3 முதல் 4 முறையோ செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பொலிவோடு காணப்படும்.

* எலுமிச்சை சாற்றினை 1/2 டீஸ்பூன் எடுத்துக் கொண்டு, அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

* வெங்காயம் மற்றும் பூண்டை சரிசமமாக எடுத்து அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ, முகத்தில் இருக்கும் கருமையான தழும்புகள் மற்றும் புள்ளிகள் மறையும்.de88074d f0e1 4d46 b813 0dbf0860a8c4 S secvpf

Related posts

சுருக்கம் வேண்டாம் : பளபளப்பு வேணும்!

nathan

கோல்டன் ஃபேஷியல்

nathan

இளம் வயதில் முகத்தில் சுருக்கம் வருவதை தடுக்கும் வழிகள்

nathan

கரும்புள்ளிகளைப் போக்கும் சில இயற்கை வைத்தியங்கள்

nathan

உடலில் வளரும் தேவையற்ற முடிகளை இயற்கை முறையில் எப்படி கட்டுப்படுத்தலாம்?

nathan

வீட்டிலேயே செய்யும் ஃபேஸ்மாஸ்க்!…

nathan

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க

nathan

முல்தானி மெட்டி எதற்கெல்லாம் பயன்படுகிறது?தெரிந்துகொள்வோமா?

nathan

சரும கருமையை நீக்க வீட்டிலேயே எலுமிச்சை ஃபேஷியல் செய்வது எப்படி?

nathan