25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
f4a76403 b9fb 4d6a bc20 86de4700f6f6 S secvpf
மருத்துவ குறிப்பு

தம்பதியினரின் சில பிரச்சனைகளே குழந்தையின்னைக்கு காரணம்

* இன்று ஆண்கள், பெண்கள் இரண்டு தரப்பினரும் தாமதமாக திருமணம் செய்துகொள்ளும் சூழல் உருவாகி வருகிறது. அதனால், தாமதமாக திருமணம் செய்து கொள்கிறவர்கள் திருமணத்துக்கு முன் மருத்துவப் பரிசோதனை ஒன்று செய்துகொள்வது சிறந்தது. ஆண்கள் விந்தணுக்களின் தரத்தையும் எண்ணிக்கையையும் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். சாதாரண ரத்தப்பரிசோதனை நிலையத்திலேயே இதை செய்துகொள்ளலாம்.

* இன்று ஜீன்ஸ் அணிவது கலாசாரமாகிவிட்டது. குறைந்தபட்சம், அணிகிற ஜீன்ஸ் தளர்வானதாகவாவது இருக்க வேண்டும். நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்க்கிறவர்களாக இருந்தால், உடையால் ஏற்படும் அழுத்தமும் இதனால் கூடுதலாகிவிடும். ஜீன்ஸ் அணிகிற நேரத்தையும் முடிந்த வரை குறைத்து, மற்ற நேரங்களில் தளர்வான காட்டன் உடைகள் அணிவது நல்லது.

* சிலர் தூங்குகிற நேரங்களில் கூட இறுக்கமான ஆடைகள் அணிந்துகொள்வார்கள். இதனால் விதைப்பைக்குப் போதுமான ரத்த ஓட்டமும் ஆக்சிஜனும் கிடைக்காமல் போகும்.

* லேப்டாப், மொபைல் என்ற எலெக்ட்ரானிக் பொருட்களினால் ஏற்படுகிற பாதிப்புகள் நேரடியாக நிரூபிக்கப்படாவிட்டாலும், கவனமாகப் பயன்படுத்துவது நல்லது. குறிப்பாக, லேப்டாப்பை மடியில் வைத்துக்கொண்டு வேலை பார்ப்பது, மொபைல் போனை பேன்ட் பாக்கெட்டில் வைத்துக்கொள்வது போன்ற பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.

* உடன்பிறந்தவர்களில் யாருக்காவது குழந்தையின்மை பிரச்சனை இருந்தால், மற்றவர்கள் அதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு பரிசோதனை செய்துகொள்ளலாம்.

* சில ஆண்களுக்கு விதைப்பையே இருக்காது. இவர்கள் மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். ஆணுறுப்பில் வீக்கம் உள்ளவர்கள், அடிக்கடி நோய்த் தொற்று ஏற்படுகிறவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம்.

* புகை, மது ஆகியவை ஆண் மலட்டுத்தன்மையை உருவாக்குவதில் முக்கிய காரணிகளாக இருக்கின்றன என்பதால், அப்பாவாக ஆசை உள்ளவர்கள் இந்தப் பழக்கங்களைக் கைவிடுவதைத் தவிர வேறு வழியில்லை.

* பெண்களில் முறையான மாதவிலக்கு இல்லாதவர்கள், மாதவிலக்கு ஏற்படுவதற்காக மாத்திரைகள் எடுத்துக் கொள்வதைவிட பாலிசிஸ்டிக் ஓவரி குறைபாடு இருக்கிறதா என்பதைப் பரிசோதிப்பது முக்கியம்! இன்று ஆண்மைக்குறைவு, குழந்தையின்மைக்கு சிகிச்சை என்ற பெயரில் போலி மருத்துவர் பலர் இருப்பதால், உங்கள் மருத்துவரை கவனமாகத் தேர்ந்தெடுங்கள்.
f4a76403 b9fb 4d6a bc20 86de4700f6f6 S secvpf

Related posts

மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும் மனஅழுத்தம்

nathan

இந்த அறிகுறிகள் இருந்தா அது கல்லீரல் நோயாம்..

nathan

ஹைப்போதைராடிஸத்தால் ஏற்படும் சரும பாதிப்புகள்

nathan

அரிதிலும் அரிதான மூலிகை ஆடாதொடை

nathan

செரிமான பிரச்சனையை போக்கும் ஓமம் டீ

nathan

குரலில் மாற்றமா? கவனம் தேவை

nathan

கர்ப்பமடைவதை தடுக்கும் கர்ப்பப்பை திசுக்கள்

nathan

60 வருடமாக கருப்பையில், கருவை சுமந்து வரும் அதிசய மூதாட்டி!!!

nathan

மரு, கட்டியை குணப்படுத்தும் இரணகள்ளி

nathan