26.1 C
Chennai
Thursday, Nov 14, 2024
5166215853 baef054a65 o
மருத்துவ குறிப்பு

இளைப்பு நோய் போக்கும் திப்பிலி

கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவொழிந்தாரே

திப்பிலிக்கட்டை, நதிகரந்தை, நறுக்குவது, நறுக்குத்திப்பிலி, கண்டந்திப்பிலி என்று அழைக்கப்படும் திப்பிலி, தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தானாகவே வளரும். வீட்டுத்தோட்டங்களிலும் வளரும் தன்மை கொண்டது. பெரும்பாலும் பழத்திற்காகவும், வேருக்காகவும் இதை வளர்ப்பார்கள். இதன் இலைகள் ஏழுகூறுகள் கொண்டதாக அமைந்திருக்கும். கொடியினத்தை சேர்ந்த இதன் பூக்கள், மிகச்சிறியதாகவும், பழம் சிவப்பு நிறத்திலும் இருக்கும். அரிசி திப்பிலி, யானைத்திப்பிலி இரண்டு வகை உண்டு. இதன் வேர் சிறுமுடிச்சுகளுடன் நீ்ண்டு மெல்லியதாகவும், வெளுத்த மஞ்சள் நிறமாயுமிருக்கும்.

பச்சை திப்பிலி அழுலைபோக்கும் காய்ந்த திப்பிலி இருமல், குன்மம், இரைப்பு மயக்கம், சுவையின்மை, பொருமல், தலைவலி, மூர்ச்சை, தொண்டைநோய், மூக்கு காதுகண் நோய்கள், புழு நோய்கள் ஆகியவற்றை நீக்கும். ஈளை இருமல், இரைப்பு, வயிற்று உப்பிசம் முதலியவற்றை போக்கும்.

மழைக்காலங்கில் ஏற்படும் தீராத இருமலுக்கு திப்பிலி 70 கிராம் எடுத்து அதனுடன் கரிசலாங்கண்ணி ஒருபிடி எடுத்து 350மிலி தண்ணீரில் போட்டு சுண்டக்காய்ச்சிய பின் அடியில் தேங்கி நிற்கும் திப்பிலியை தழையையும்,இளவறுப்பாய் வறுத்து பொடித்து வைத்து கொண்டு அதனுடன் சமஅளவு அரிசிப்பொடி சேர்த்து அதன் அளவிற்கு சர்க்கரை சேர்த்து மூவிரல் அளவு எடுத்து காலை, மாலை சாப்பிட இருமல் தீரும்.

திப்பிலி ஐந்து பங்கு, தேற்றான் விதை மூன்று பங்கு எடுத்து இரண்டையும் பொடித்து அரிசி கழுவிய கழுநீரில் 4கிராம் அளவில் காலையில் மட்டும் சாப்பிட பெண்களின் பெரும்பாடு, வெள்ளைத்தீரும். திப்பிலி பொடி, கடுக்காய் பொடி சமஅளவு எடுத்து தேன்விட்டு பிசைந்து காலை மாலை இலந்தைங்காய் அளவு மூன்று நாட்கள் சாப்பிட இளைப்பு நோய் தீரும். திப்பிலிப்பொடி மூவிரல் எடுத்துகம்மாறு வெற்றிலைச்சாறும் தேனும் சமஅளவு கலந்து சாப்பிட கோழை, இருமல், சுரம் தீரும். திப்பிலி சூரணம் கால் 5 கிராம் அளவில் எடுத்து பசும்பால் விட்டு காய்ச்சி சாப்பிட இருமல், வாய்வு, மூர்ச்சை நீங்கும்.

திப்பிலி 350 கிராம் மிளகு, சுக்கு வகைக்கு 175கிராம், பெருஞ்சீரகம், சீரகம் வகைக்கு 70 கிராம் அரத்தை 70 கிராம் லவங்கப்பட்டை 35 கிராம், ஓமம் 70கிராம், தாளிசம், லவங்கப்பத்திரி, திரிபலை, லவங்கம், ஏலம், சித்திரமூலம் அனைத்தையும் சர்க்கரை கலந்து தேன்விட்டு பிசைந்து ஒரு சிட்டிகை அளவு 40 நாட்கள் சாப்பிட இளைப்பு, ஈளை, இருமல், வாயு நீங்கும்.

திப்பிலி 70 கிராம், சீரகம், சுக்கு, ஏலம், திப்பிலிவேர், வாய்விடங்கம், கடுக்காய், மிளகு, வகைக்கு 9 கிராம் எடுத்து அதை இளம்வறுப்பாய் வறுத்து தேன், சர்க்கரை அல்லது பனைவெல்லம், சேர்த்து காய்ச்சி பாகு பதத்தில் பிசைந்து வைத்துக்கொண்டு ஒரபாக்கு அளவில் நாள்தோறும் காலை, மாலை 40 நாட்கள் சாப்பிட்டு வர இரைப்பு இருமல், தலை கிறுகிறுப்பு, நாவறட்சி, இளைப்பு குணமாகும்.

நீண்டநாள் தேமல் உள்ளவர்கள் திப்பிலியை தூள் செய்து ஒரு மாதம் தேனில் குழைத்து சாப்பிட தேமல் நீங்கும். திப்பிலி சூரணத்தை சர்க்கரையுடன் கலந்து காலை, மதியம், இரவு மூன்று வேளையும் நெய்யுடன் கலந்து சாப்பிட ஆண்மை பெருகும். திப்பிலி வேரை பால்விட்டு அரைத்து பாலில் கலக்கி கொடுக்க குறுக்குவலி, நாவறட்சி வளிநோய் போகும். இதை தேரையான் வெண்பா

கட்டி யெதிர்நின்று கடுநோயெல் லாம்பணியும்
திட்டி வினையகலும் தேகமெத்த புட்டியாம்
மாமனுக்கு மாமமென மற்றவர்க்கு மற்றவனால்
காமமெனுந் திப்பிலிக்கும் கை.

என்கிறது. கிராமங்களில் வயல்வெளிகளில் கடும் உழைப்பில் ஈடுபடும் மக்கள் இரவு சாப்பிடும் உணவில் திப்பிலியை அரைத்து குழம்பு வைத்து சாப்பிடுவார்கள். இதனால் அவர்களின் உடல் அசதி நீங்குவதுடன் மறுநாள் புத்துணர்ச்சியுடன் செயல் படுவார்கள். மிச சிறிய கொடியினமாக இருந்தாலும் அதை அலட்சியம் செய்யாமல் மனிதர்களுக்கு பயன்படும் முறையை கண்டறிந்து நமக்கு சொல்லிய முன்னோர்கள் வழியில் பயன்படுத்தி நலமாக வாழ்வோம்.
5166215853 baef054a65 o

Related posts

கர்ப்பிணிகள் சுடுதண்ணீரில் குளித்தால் கருச்சிதைவு ஏற்படுமாம்…

nathan

வீட்டில் நிகழும் சுப நிகழ்ச்சிகளுக்கு வாழை மரம் கட்டுவது ஏன்? என்று தெரியுமா ?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நீண்ட நேர பிரசவ வலியில் இருந்து தப்பித்து எளிதில் பிரசவம் நடைபெற மேற்கொள்ளும் வழிகள்!!!

nathan

உடல் எடை அதிகரிக்க உதவும் உலர் திராட்சை!

nathan

இதோ மாதவிடாய் காலத்தில் கட்டாயம் செய்யக்கூடாத செயல்கள்! இத படிங்க!

nathan

கட்டியைக் கரைக்கும் சப்பாத்திக்கள்ளி

nathan

இரும்புச்சத்து அதிகமானால் என்ன ஆகும் தெரியுமா..?

nathan

சிறுநீரகத்தை பாதுகாக்கும் வழிமுறைகள்

nathan

பெண்கள் வாழ்க்கையில் தங்களை மேம்படுத்தி கொள்ள டிப்ஸ்

nathan