24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
potato chutney 1638874020
அழகு குறிப்புகள்

சுவையான உருளைக்கிழங்கு சட்னி

தேவையான பொருட்கள்:

* பெரிய உருளைக்கிழங்கு – 1 (சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்)

* பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* தண்ணீர் – 1/2 கப்

* உப்பு – சுவைக்கேற்ப

அரைப்பதற்கு…

* பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)

* தக்காளி – 2 (நறுக்கியது)

* பூண்டு – 4 பல்

* வரமிளகாய் – 2

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 1/2 டேபிள் ஸ்பூன்

* நல்லெண்ணெய் – 1/2 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள வெங்காயம், தக்காளி, வரமிளகாய், பூண்டு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.

* பின் அதில் அரைத்து வைத்துள்ள வெங்காய தக்காளி பேஸ்ட்டை சேர்த்து கிளறி, சில நிமிடங்கள் நன்க பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.

* பின்பு அதில் உருளைக்கிழங்கை சேர்த்து, அரை கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து சில நிமிடங்கள் உருளைக்கிழங்கு மென்மையாகும் வரை வேக வைத்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

* இறுதியில் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றி கிளறினால், சுவையான உருளைக்கிழங்கு சட்னி தயார்.

குறிப்பு:

* உருளைக்கிழங்கு அளவுக்கு அதிமாக வேக வைத்துவிட வேண்டாம்.

* வேண்டுமானால், ஃப்ளேவருக்காக அத்துடன் 1/2 டீஸ்பூன் சாம்பார் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

* நல்லெண்ணெய் பிடிக்காவிட்டால், சமையல் எண்ணெயையே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Related posts

குழந்தைக்கான உணவூட்டல் தொடர்பான அறிவு கட்டாயம் அனைவருக்கும் வேண்டியதே…

sangika

அழகு குறிப்பு – வசீகரிக்கும் முகத்திற்கு ஆல்கஹால் ஃபேசியல்ஸ்!. !

nathan

சற்றுமுன் ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்..!

nathan

இவரின் வயது 55 என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? சிங்கப்பூரைச் சேர்ந்த பிரபல மாடல்!

nathan

முகத்திற்கு பேஸ்பேக்

nathan

கூந்தல் உதிர்வுக்கு காரணம் இவைதான்!…

nathan

இளம்பெண்கள் அழகு தேவதைகளாக வலம் வர இதை செய்து வாருங்கள்!…

sangika

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா வெளியிட்ட ஷாக் தகவல்

nathan

இவ்வாறான காரணங்களினால் தான் முகம் முதுமைத் தோற்றத்தை அடைகின்றது!…

nathan