36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

சுவையான சோள மாவு அல்வா

சோள மாவு அல்வாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Corn Flour Halwa: Diwali Special
தேவையான பொருட்கள்:

சோள மாவு – 1/2 கப்
சர்க்கரை – 1 1/2 கப்
தண்ணீர் – 1 கப் + 1 1/2 கப்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி – 1/4 கப் (நறுக்கியது)
ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
கேசரி பவுடர் – 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் சோள மாவை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் கேசரி பவுடர் சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் சிறு வாணலியில் சிறிது நெய் ஊற்றி, அதில் முந்திரியை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு நாண்-ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து, சர்க்கரையானது நன்கு கரைந்து, சர்க்கரை பாகு ரெடியானதும், அதில் கலந்து வைத்துள்ள சோள மாவை சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

அப்படி கிளறி விடும் போது, ஆங்காங்கு கெட்டியாக ஆரம்பித்து, அல்வா போன்று வர ஆரம்பிக்கும். அப்போது அதில் நெய் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு அல்வா போன்று வரும் வரை கிளறி, பின் அதில் வறுத்த முந்திரியை சேர்த்து கிளறி இறக்கி, ஒரு தட்டில் பரப்பி, ஒரு மணிநேரம் கழித்து, அதனை துண்டுகளாக்கினால் சோளமாவு அல்வா ரெடி!!!

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மெஹந்தி சடங்கின் போது ஸ்டைலாக தோன்றுவது எப்படி?

nathan

உங்களது சருமம் ஜொலிக்க வேண்டுமெனில்!..இதோ சில வழிகள்!

sangika

மணக்கும் மல்லிகை எண்ணெய்

nathan

இப்படி வாரம் ஒரு முறை செய்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

nathan

பிரதாப் போத்தன்! இறப்பதற்கு முன்பே மரணம் குறித்த பதிவு

nathan

செருப்பால் சிக்கிய இளைஞர்கள்!! ஆற்றில் மிதந்த இளம் பெண்ணின் சடலம்

nathan

முக சொர சொரப்புகள், கருமை ஆகியவற்றை குணப்படுத்த அஞ்சறை பெட்டி!…

sangika

அழகான சருமத்தை பெற அழகு குறிப்புகள்…!

nathan

பேச்சுலர்களுக்கான முட்டை கிரேவி

nathan