24.9 C
Chennai
Wednesday, Jan 22, 2025
does anorexia genetic link
எடை குறைய

தட்டையான வயிற்றைப் பெற உதவும் டாப் 5 உணவுகள்!

ஒவ்வொருவருக்குமே தொப்பை இல்லாத தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் நம்மைச் சுற்றியுள்ள ஃபாஸ்ட் புட், ஜங்க் உணவுகளினால் இந்த ஆசை வெறும் கனவாகவே மாறிவிடுகிறது. இருப்பினும் நம் வாய்க்கு பூட்டு போட்டு, சரியான டயட் மற்றும் அன்றாட உடற்பயிற்சிகளை மேற்கொண்டால், நிச்சயம் தொப்பையைக் கரைத்து தட்டையான வயிற்றைப் பெறலாம்.

தட்டையான வயிற்றைப் பெற டயட்டில் ஒருசில உணவுப் பொருட்களை சேர்க்க வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிசம் சீராக பராமரிக்கப்பட்டு, தொப்பை சுருங்கி தட்டையான வயிற்றை விரைவில் பெறலாம். சரி, இப்போது அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.

பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்
தசைகளின் சீரான வளர்ச்சிக்கும், கொழுப்புக்களைக் கரைக்கவும் பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் மிகவும் உதவியாக இருக்கும்.

பாதாம்
பாதாமில் புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின் ஈ மற்றும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. ஆகவே டயட்டில் இருப்போர், ஸ்நாக்ஸ் நேரத்தில் பாதாமை உட்கொண்டு வர பசியுணர்வு குறைந்து, அடிக்கடி எதையாவது சாப்பிட வேண்டுமென்ற எண்ணம் நீங்கும்.

சிவப்பு குடைமிளகாய்
குடைமிளகாயில் வைட்டமின் சி ஏராளமாக நிறைந்துள்ளது. இது கொழுப்புக்களை கரைக்கத் தேவையான ஓர் ஊட்டச்சத்து. மேலும் இதில் உள்ள பீட்டா-கரோட்டீன் மற்றும் லைகோபைன் உடல் எடை குறைய உதவுவதாக ஆய்வுகளும் கூறுகின்றன.

பசலைக்கீரை
ஆராய்ச்சியில் பச்சை இலைக் காய்கறிகளான கீரைகளை உட்கொண்டால் அடிக்கடி ஏற்படும் பசியுணர்வு குறைந்து, கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டம் குறைந்து விரைவில் தொப்பை மற்றும் எடையைக் குறைக்க உதவுவதாக தெரிய வந்துள்ளது.

ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று சொல்வார்கள். ஏனெனில் அந்த அளவில் ஆப்பிளில் சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக ஆப்பிளில் கலோரிகள் குறைவு ஆனால் பசியுணர்வைத் தடுக்கும் நார்ச்சத்து அதிகம். எனவே இதனை தினமும் ஸ்நாக்ஸ் நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் தொப்பையைக் குறைக்கலாம்.
does anorexia genetic link

Related posts

உங்களுக்கு நீர் உடம்பா? அதை குறைக்க சூப்பர் டிப்ஸ்!

nathan

சூப்பர் டிப்ஸ்! உடல் எடையை குறைக்க வீட்டு மருத்துவமே போதுங்க!!!

nathan

உடல் ஊளை சதை குறைக்கும் கொள்ளுப்பால்!

nathan

வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பைக் குறைக்க

nathan

உடலை ஸ்லிம்மாக வைக்க உதவும் ‘கிரேப்ஸ்’!

nathan

எடை குறைப்புக்கு இந்தப்பழதை சாப்பிடுங்கள்!…

sangika

கொழுப்பு குறைய இதைக் குடிங்க

nathan

உடல் எடையால் கஷ்டப்படுறீங்களா? அப்ப தினமும் காலையில கறிவேப்பிலை ஜூஸ் குடிங்க.

nathan

சூப்பர் டிப்ஸ்! எடையை குறைக்க காலையில் பட்டை இஞ்சி டீ குடிங்க…

nathan