29.4 C
Chennai
Thursday, Jul 17, 2025
3a43e9e4 c917 4824 b8bc d53cd443a695 S secvpf
பெண்கள் மருத்துவம்

30 வயதிலிருந்து பெண்களுக்கு ஆரம்பமாகும் உடல் பிரச்சனைகள்

உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் உடலுக்கும், உடலில் இருக்கும் பாகங்களுக்கும் கூட வயது அதிகரிக்கிறது. முப்பதை நீங்கள் கடக்கும் ஒவ்வொரு வயதும் அதற்கு எதிராக உடல் வலிமை குறைய ஆரம்பிக்கும். இதில், பெண்களின் உடலில் எது போன்ற மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை பார்க்கலாம்.

முப்பது வயதை தொட்டவுடன் முதலில் தென்படும் மாற்றம் சருமத்தில் சுருக்கம். இது பெண்களை மிகவும் பாதிக்கும். ஏனெனில், பெண்களுக்கு எப்போதுமே அழகில் சற்று அதீத ஈர்ப்பு இருக்க தான் செய்யும். முப்பது வயதுக்கு பிறகு பிள்ளை பெற்றுக் கொள்ள விரும்புவோர் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

ஏனெனில் முப்பது வயதுக்கு பிறகு பெண்களுக்கு மெல்ல மெல்ல கருவளம் குறைய ஆரம்பிக்கிறது. முப்பது வயதுக்குக் பிறகு சில பெண்களுக்கு மோசமான மாதவிடாய் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. பிடிப்புகள், ஐந்து நாட்களும் கடினமாக இரத்தப் போக்கு ஏற்படுவது போன்ற சிக்கல்கள் சில பெண்களுக்கு ஏற்படலாம். முப்பது வயதுக்கு பிறகு பெண்களுக்கு வளர்சிதை மாற்றம் மெல்ல, மெல்ல குறைய ஆரம்பிக்கும். இந்த வயதில் இருந்தாவது பெண்கள் சத்தான உணவுகளை உட்கொள்ள ஆரம்பிக்க வேண்டும்.

முப்பது வயதுக்கு மேல் பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனையும் வரும். சிறுநீரக பை வலுவிழப்பு மற்றும் குழந்தை பிறப்பு போன்றவை இதற்கான காரணிகளாக இருக்கின்றன. முப்பது வயதுக்கு பிறகு குழந்தைகளுக்கு தாய்பால் தருவது போன்ற காரணங்களினால் மார்பகங்கள் இறுக்கம் குறைந்து தொங்குவது போல உருமாறும்.

பொதுவாகவே பெண்களை போலவே அவர்களது உடலும் மென்மையானது. இதில், முப்பது வயதிற்கு மேல் இவர்களுக்கு காயங்கள் சீக்கிரமாக ஆறாது. எனவே, இதில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வேலை பளு, பிள்ளை வளர்ப்பு, எலும்பில் தேய்மானம் ஏற்பட ஆரம்பிப்பது என பல காரணங்களால் இடுப்பு வலி அடிக்கடி வந்து போகும் வயது இந்த முப்பது வயதின் தொடக்கத்தில் தான்.
3a43e9e4 c917 4824 b8bc d53cd443a695 S secvpf

Related posts

பெண்களின் சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் தென்படும் அறிகுறிகள்!!!

nathan

மாதவிலக்கு கோளாறை சரிசெய்யும் கற்றாழை

nathan

குழந்தைகளுக்கு அலர்ஜி வருவது எப்படி கண்டு பிடிப்பது….?

sangika

காரணங்களும்..தீர்வுகளும் இதோ..! மாதவிடாய் நாட்களில் இரவு அதிக வியர்வை வெளியேறுகிறதா..?

nathan

பதினாறு செல்வங்களில் முக்கியமானது குழந்தைச் செல்வம்….

sangika

தோல் வறட்சி நீங்க எலுமிச்சை!…

sangika

பெண்களே நீங்கள் அதிகம் கோபப்படுபவரா? அப்ப இத படிங்க!…

sangika

எந்த வயது வரை குழந்தைகளை அருகில் படுக்க வைக்கலாம் தெரியுமா?

sangika

கருக்கலைப்பால் ஏற்படும் உடல் உபாதைகள்

nathan