27.8 C
Chennai
Tuesday, Jan 27, 2026
p25a
மருத்துவ குறிப்பு

உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் மருதாணி!

உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் மருதாணி!
மருதாணி தெரியும். அதற்கு மருதோன்றி, அழவணம் என்ற பெயர்களும் இருக்கின்றன. கண் எரிச்சல், உடல்சூடு உள்ளவர்கள், மருதாணியை அரைத்து மாதம் ஒருமுறை கை – கால்களில் பூசி வந்தால், மருந்துகளை வாங்கி சாப்பிட வேண்டியிருக்காது. மருதாணி இலையை மையாக அரைத்து சொத்தை பிடித்த நகங்களின் மேல் தொடர்ந்து சில நாட்கள் கட்டி வந்தால் பலன் கிடைக்கும். வெள்ளைப்படுதல், பெரும்பாடு (மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு), அதிகமாக சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்னை உள்ளவர்கள், 20 கிராம் அளவுக்கு மருதாணி இலையை அரைத்து பாலில் கலந்து 3 நாட்கள் காலை நேரங்களில் சாப்பிடுவதோடு… அன்றைய நாட்களில் பால் சோறு மட்டும் சாப்பிட்டு வந்தால் கைமேல் பலன் கிடைக்கும்.

மருதாணியை அரைத்து நீரில் கரைத்து வாய் கொப்புளித்தால்… வாய்ப்புண், வாயில் அடிபட்டதால் உண்டாகும் சிறுகாயம், சிராய்ப்பு போன்றவை சரியாகும். இதேபோல் மருதாணி இலைகளை நீரில் ஊறவைத்து, வாய் கொப்புளித்து வந்தால் தொண்டை கரகரப்பு, தொண்டைக் கம்மல் குணமாகும். மருதாணி செடியின் பட்டையை ஊறவைத்த நீரை அரை அவுன்ஸ் காலை, மாலை குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். மருதாணி பூக்களையும், இளந்தளிர்களையும் பறித்து சாறு பிழிந்து அரைத் தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தொழுநோய், மேக நோய் போன்றவை மேலும் பரவாமல் தடுக்கும்.

அம்மை போட்ட காலங்களில் கண்களுக்குப் பாதிப்பு ஏற்படாமலிருக்க, இரண்டு கால் பாதங்களிலும் மருதாணி இலையை அரைத்து கட்டி வரலாம். தூக்கம் வரவில்லை என்பதற்காக கண்ட கண்ட மருந்து, மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவோர் மருதாணிப்பூவை தலையணையின் அடியில் வைத்து தூங்கினால், நல்ல உறக்கம் வரும். பெண்கள் தலையில் மருதாணிப்பூவை சூடினாலும் நற்பயன்கள் கிடைக்கும்.
p25a

Related posts

குறட்டை விட்டால் இதயத்துக்குப் பிரச்னையா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முதல் குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது இரண்டாவதாக கருவுற்றால் என்னென்ன பிரச்சனைகள்?

nathan

இளம் பெண்களின் கல்யாண ஆசைகள் -தெரிஞ்சிக்கங்க…

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…பிரசவத்திற்கு பின்னர் பெண்களால் வெளிக்கூற முடியாத கடுமையான வலிகள்!

nathan

தசை சுளுக்கா? இதோ எளிய நிவாரணம்!

nathan

தெரிந்துகொள்வோமா? 40 வயதை நெருங்கும் பெண்களுக்கு அவசியமான பரிசோதனைகள்

nathan

உங்க வாய் பயங்கரமா நாறுதா? அப்ப தினமும் செய்யுங்க…

nathan

பணத்தட்டுப்பாட்டை சமாளிப்பது எப்படி

nathan

வாழ்க்கையை இன்பமாக்கி கொள்ள உறவுகளின் துணை தேவை

nathan