35.7 C
Chennai
Tuesday, Jul 15, 2025
66bcaab4 8c93 45cf 9736 3d286533e630 S secvpf.gif
எடை குறைய

ஒரு மாதத்தில் தொப்பையை குறைக்கும் எளிய உடற்பயிற்சிகள்

பலரும் ட்ரெட்மில் மற்றும் சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சிகளை செய்து வந்தால் தான் தொப்பையைக் குறைக்க முடியும் என்று நினைக்கின்றனர். ஆனால் நிபுணர்களோ, உடற்பயிற்சியுடன், ஊட்டச்சத்துமிக்க மற்றும் நல்ல சரிவிகித டயட்டை மேற்கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறார்கள்.

ஏனெனில் கொழுப்புக்களைக் கரைப்பதில் உணவுகளும் முக்கிய பங்கினை வகிக்கிறது. எனவே இதை படித்து முப்பதே நாட்களில் தொப்பையைக் குறைத்து தட்டையான வயிற்றைப் எப்படி பெறலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

* ஸ்குவாட்ஸ் பயிற்சி அடிவயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் எளிய உடற்பயிற்சி. இதனை ஜிம்மில் சென்று தான் செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே செய்யலாம். இதற்கு விரிப்பின் மீது இரண்டு கைகளையும் நேராக நீட்டி, உட்கார்ந்து எழ வேண்டும். இப்படி ஒரு செட்டிற்கு 10 வீதம், 3 செட் செய்து வர வேண்டும். ஆரம்பத்தில் இந்த பயிற்சி செய்யும் கால்கள் சற்று வலிக்கும்.

* பார் உடற்பயிற்சிகளும் அடிவயிற்றில் சேர்ந்துள்ள கொழுப்புக்களைக் கரைக்கும். அதற்கு ஓர் கம்பியைப் பிடித்து, கால்களை சற்று முன்பக்கமாக மடக்கி, உடலை மேலே தூக்க வேண்டும். இப்படி ஒரு செட்டிற்கு 10 என்ற வீதம் 3 செட் செய்ய வேண்டும். அல்லது பரணை பிடித்து கொண்டும் செய்யலாம்.

* புஷ் அப் உடற்பயிற்சிகளும் வயிற்றில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்கும். எப்படியெனில் இந்த உடற்பயிற்சியை செய்யும் போது, அடிவயிற்றில் அழுத்தம் கொடுக்கப்படும். இப்படி கொடுக்கப்படும் அழுத்தத்தால் கொழுப்புக்கள் படிப்படியாக கரைய ஆரம்பிக்கும்.

* மூச்சுப் பயிற்சிகளும் தொப்பையைக் குறைக்க உதவும். எனவே தினமும் 30 நிமிடம் மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டு வருவதன் மூலம், தொப்பையைக் குறைக்கலாம்.

* தொப்பையைக் குறைக்க நினைக்கும் போது, கலோரிகள் குறைவான உணவை உட்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, புரோட்டீன் அதிகமான மற்றும் நல்ல ஆரோக்கியமான கொழுப்புக்கள் நிறைந்த உணவை உட்கொண்டு வர வேண்டும். முக்கியமாக ஜங்க் உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
66bcaab4 8c93 45cf 9736 3d286533e630 S secvpf.gif

Related posts

உங்களுக்கான தீர்வு விரைவில் உடல் எடை குறைக்க??

nathan

உங்கள் இடுப்பு சுற்றளவை குறைக்கும் ஓர் அற்புத தயாரிப்பு! முயன்று பாருங்கள்!!

nathan

சரியான முறையில் எளிமையாக உடல் எடையை குறைக்க இவற்றை முயன்று பாருங்கள்

sangika

சூப்பர் டிப்ஸ்! உடல் எடையை குறைக்க வீட்டு மருத்துவமே போதுங்க!!!

nathan

பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்க சில டிப்ஸ்

nathan

உடல் பருமனைக் குறைக்க சில வழிகள்….!!!

nathan

அசிங்கமாக இருக்கும் பின்புற சதையை குறைக்க சில எளிமையான வழிமுறைகள்!சூப்பர் டிப்ஸ்..

nathan

சூப்பர் டிப்ஸ்! எடையை குறைக்க காலையில் பட்டை இஞ்சி டீ குடிங்க…

nathan

உடலை ஸ்லிம்மாக வைக்க உதவும் ‘கிரேப்ஸ்’!

nathan