28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
6c671b22 530c 4e82 b747 dbd32c1222ef S secvpf
மருத்துவ குறிப்பு

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை எதனால் உண்டாகிறது?

திருமணத்துக்குப் பிறகு இயல்பான தாம்பத்தியம் இருந்தும், 2 ஆண்டுகளுக்கு மேல் கருத்தரிக்காவிட்டால், அதற்கு மலட்டுத்தன்மை (Infertility) காரணமாக இருக்கலாம். குழந்தையின்மை குறைபாட்டுக்கு ஆணும் காரணமாக இருக்கலாம்…

பெண்ணும் காரணமாக இருக்கலாம். சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மாற்றங்கள், மன அழுத்தம் சார்ந்த பிரச்சனைகள் என பொது காரணிகளும் இருக்கலாம். மன அழுத்தம் குழந்தையின்மைக்குக் காரணமாக இருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. காசநோயானது ஆண்களுக்கும் மலட்டுத்தன்மையை உருவாக்கும். ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு புகைப்பழக்கம், மது, பருமன், விந்தணுக்களின் உற்பத்தி போதுமான அளவு இல்லாமல் போவது, உயிரணுக்கள் கருமுட்டையைச் சென்றடையும் வேகம் குறைந்திருப்பது, ஹார்மோன் குறைபாடுகள், மற்ற பாலியல் குறைபாடுகள் போன்ற பல காரணங்கள் இருக்கலாம். விதைகளில் உற்பத்தியாகிற அணுக்கள் விதைப்பை என்ற ஒரு இடத்தில் சேர்ந்திருக்கும்.

இந்த இடத்தில் இருக்கும் ஒரு வால்வு தாம்பத்தியம் கொள்கிறபோது விலகி, விந்தணுக்களை வெளியேற்றும். மற்ற நேரங்களில் விந்தணுக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மூடிக்கொள்ளும். இதனால்தான் சிறுநீர் கழிக்கும்போது விந்தணுக்கள் வெளியேறுவதில்லை. விந்தணுக்கள் பாதுகாக்கப்படும் இந்த இடத்தில் அடைப்பு ஏற்பட்டாலும் குழந்தையின்மை பிரச்சனை உண்டாகும். இந்த அடைப்பு, வெரிக்கோசிஸ் போன்ற அறுவைசிகிச்சைகள் செய்துகொண்டதின் பக்கவிளைவாகவும் நோய்த்தொற்றுகளின் காரணமாகவும் உண்டாகலாம்.

இக்குறைபாடுகளில் பெரும்பாலானவை விதைப்பையை நாம் கவனமாகப் பார்த்துக் கொள்ளாததாலேயே ஏற்படுகிறது. விதைப்பைக்கு ரத்த ஓட்டமும் நாம் சுவாசிக்கிற உயிர்க்காற்றும் போதுமான அளவில் கிடைக்க வேண்டும். அப்போதுதான் அதன் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும் (இது பெண்களின் கருப்பைக்கும் பொருந்தும்). ஆனால், கொழுப்பு உணவுகள், இறுக்கமான உடைகள், நீண்ட நேரம் பணிபுரிவது, போதுமான தண்ணீர் அருந்தாதது, உடல் சூடு போன்ற காரணங்களால் விதைப்பைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு விந்தணுக்களின் தரம் குறைந்து விடுகிறது.

ஹார்மோன் குறைபாடுகளால் விதையில் போதுமான வளர்ச்சி இல்லாததும் காரணமாக இருக்கிறது. இன்று எல்லாவற்றுக்கும் கருவிகள் வந்துவிட்டதால் உடல் உழைப்பு குறைந்துவிட்டது. வாகன வசதிகளும் வந்துவிட்டதால் நடக்கிற பழக்கமும் இல்லாமல் போய்விட்டது. வேலையும் கூட, Sedentary lifestyle என்ற உடல் உழைப்பு குறைந்த வாழ்க்கைமுறையாக இருக்கிறது.

ஆண் மலட்டுத்தன்மைக்கு சிகிச்சையாக, ‘முறையான உணவுமுறையைப் பின்பற்றுங்கள், சுகாதாரமாக இருங்கள், தொற்றுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று அடிப்படை மாற்றங்களைத்தான் முதலில் சொல்வோம். இரண்டாவது கட்டமாக உடல் பரிசோதனை (Physical examination) செய்தால், என்ன பிரசச்னை என்பதை அறிந்து கொள்ளலாம். பெரும்பாலான மலட்டுத்தன்மையை இந்த இரு கட்டங்களிலேயே சரி செய்துவிடலாம்.

மருத்துவம் பல்வேறு வழிகளிலும் வளர்ந்திருக்கும் இந்த காலத்தில் குழந்தையின்மை என்பதை பெரிய கவலையாகவோ பிரச்சனையாகவோ நினைக்க வேண்டியதில்லை. இன்று ஆண்மைக்குறைவு, குழந்தையின்மைக்கு சிகிச்சை என்ற பெயரில் போலி மருத்துவர் பலர் இருப்பதால், சிகிச்சை பெற்றுக்கொள்ளப் போகும் மருத்துவமனை தரமானதுதானா, சிகிச்சையளிக்கப் போகிறவர் தகுதி பெற்ற மருத்துவரா என்பதை கவனமாகப் பரிசீலனை செய்துகொள்ளுங்கள்.
6c671b22 530c 4e82 b747 dbd32c1222ef S secvpf

Related posts

கருவில் இருப்பது என்ன குழந்தை என்று தெரிய அந்த காலத்தில் செய்த வினோதமான சோதனைகள் ?தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய வயிற்று புற்றுநோய்க்கான முக்கிய அறிகுறிகள்!

nathan

அவசியம் படிக்க.. நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை

nathan

மனிதனின் ஒரு கால் மட்டும் உயரம் குறைந்து இருப்பதற்கு காரணம்

nathan

தெரிஞ்சிக்கங்க…இதய நோய்கள் வராமல் தடுக்கும் அதி சக்தி வாய்ந்த பழங்கள் என்னென்ன தெரியுமா?

nathan

சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆகலையா? கவலைய விடுங்க

nathan

புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது இஞ்சி!….

sangika

உங்களுக்கு அல்சர் இருக்க? அது விரைவில் குணமாக வேண்டுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

nathan