depoppiii
சைவம்

தயிர் சாதம்

தேவையான பொருட்கள்:
பச்சரிசி – ஒரு டம்ளர்
பால் – 2 டம்ளர்
தயிர் – 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிய துண்டு
உப்பு – 4 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
எண்ணெய் – சிறிது

செய்முறை:
சாதத்தினை சற்று குழைவாக வடித்துக் கொள்ளவும். பாலை நன்றாகக் காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும்.
சூடான சாதத்தில் பாலை ஊற்றி நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து இஞ்சி, பச்சைமிளகாய்களைப் போட்டு வறுத்து சாதத்தில் போடவும்.
பிறகு உப்பையும், தயிரையும் போட்டு நன்றாக பிசைந்துக் கொள்ளவும். இரண்டு மணி நேரம் கழித்து சாப்பிட சரியான பக்குவத்தில் இருக்கும்.
depoppiii

Related posts

சுரைக்காய் பால் கூட்டு

nathan

சாமை அரிசி தேங்காய் சாதம்

nathan

விதவிதமான காளான் உணவுகளை தயார்செய்வது எவ்வாறு?

nathan

சுவையான சத்தான வாழைப்பூ சப்பாத்தி

nathan

சுவையான ஐந்து இலை குழம்பு !

nathan

காரசாரமான சேனைக்கிழங்கு வறுவல்

nathan

கொப்பரிக்காய வங்காய சிண்டசெட்டு புளுசு

nathan

சுவையான முருங்கைக் கீரை பொரியல்

nathan

கர்நாடகா ஸ்பெஷல் வெந்தயக்கீரை சித்ரான்னம்

nathan