இருபாலருக்குமே இருக்கும் பொதுவான பிரச்சினை முடி உதிர்வதுதான். இதில் ஆண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
முடி உதிராமல் தடுக்க என்ன செய்வது என்று குழம்புபவர்கள், முடி உதிரக் காரணம் என்ன என்பதைத்தான் யோசிக்க மறந்து விடுகின்றனர்.
ஒரு சிலருக்கு பரம்பரையில் வழுக்கையும், குறைவான முடி அமைப்பும் இருக்கும். இப்படியானவர்கள் எளிய முறையில் முடியை பாதுகாத்து வருவதுதான் சிறந்தது.
ஒரு சிலருக்கு அவர்கள் உட்கொள்ளும் மருந்து அல்லது ஷாம்புவினால் ஏற்படும் பக்க விளைவாகவும் இருக்கலாம்.
அதிகமான டென்ஷன், நோய்களினாலும் கூட முடி உதிரலாம். அப்படி இருந்தால் தியானம் மற்றும் மருத்துவ பரிசோதனை செய்வது நல்லது.
காபி, டீ குடிப்பது, சத்து குறைவு, தவறான பழக்க வழக்கம், தலை முடியை பெரும்பாலும் அசுத்தமாக வைத்திருப்பது, தினமும் வண்டியில் வெகு தொலைவு பயணிப்பது போன்றவையும் முடி உதிரக் காரணங்கள் ஆகின்றன.