25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
22 1440231002 crab gravy
அசைவ வகைகள்

சமையல் குறிப்பு- ஸ்பைசி நண்டு கிரேவி (செட்டிநாடு பாணியில்.)

நாம் செட்டிநாடு ஸ்பைசி நண்டு கிரேவியை எப்படி செய்வதென்று பார்க்கப் போகிறோம். அதைப் படித்து அதன்படி
சமைத்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானவை-
நண்டு – 1 கிலோ
வெங்காயம் – 3 (நறுக்கியது)
தக்காளி – 4 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
வரமிளகாய் – 4
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மல்லி – 2 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 4 டேபிள் ஸ்பூன்
முந்திரி – 4
பச்சை மிளகாய் – 3-4
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
முதலில் நண்டை சுத்தமாக கழுவி நீரை முற்றிலும் வடிகட்டிக் கொண்டு, பின் ஒரு பாத்திரத்தில் அதனைப்போட்டு, நண்டு மூழ்கும் அளவில் தண் ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் பாத்திரத்தை இறக்கி, நீரை வடிகட்டிவிடவேண்டும். (இப்படி செய்வதால் நண்டு வாடை அதிகம் இருக்காது மற்றும் சாப்பிடும் போது நண்டுமென்மையாக இருக்கும்)

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, சீரகம், சோம்பு, மல்லிசேர்த்து லேசாக வறுத்து , மிக்ஸியில்போட்டு பொடிசெய்து, அதோடு தேங்காய் , முந்திரி, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஓர் அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி, கரம் மசாலா, தக்காளி, உப்பு சேர்த்து கிளறி, மிதமான தீயில் 3 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.

பின் அதில் நண்டு சேர்த்து பிரட்டி, மூடி வைத்து 10நிமிடம் வேகவைக்க வேண்டும். அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, உப்பு சுவை பார்த்து, 15 நிமிடம் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், செட்டிநாடு ஸ்பைசி நண்டு கிரேவி ரெடி!!!

நண்டு எந்த பருவநிலைக்கு ஏற்ற‍து?
நண்டில் புரோட்டீன் அதிகமுள்ளது. அதே சமயம் இது உடல்சூட்டை அதிகரிக்கும் என்பதால் மழைக்காலத்தில் இதனைசாப்பிடுவது உடலுக்கு இதமாக இருக்கும். மேலும் நண்டு உடல் வலிமையை அதிகரிக்கும். இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளது. இந்த நண்டை மசாலா, கிரேவி, குழம்பு என்று செய்து செய்து சுவைக்கலாம்.
22 1440231002 crab gravy

Related posts

மட்டன் சுக்கா செய்வது எப்படி?

nathan

புதினா ஆம்லேட்

nathan

காரசாரமான முட்டை குழம்பு செய்முறை விளக்கம்

nathan

செட்டிநாட்டு இறால் வறுவல்

nathan

சைனீஸ் எக் நூடுல்ஸ் செய்ய வேண்டுமா?

nathan

சிக்கன் 65 செய்வது எப்படி

nathan

குழந்தைகளுக்கு சத்தான கேரட் முட்டை ஆம்லெட்

nathan

சுவையான செட்டிநாடு சைவ மீன் குழம்பு

nathan

மஷ்ரூம் ஆம்லெட்

nathan