chettinadmuttaipodimasrecipe 1616058348
சமையல் குறிப்புகள்

முட்டை பொடிமாஸ்

தேவையான பொருட்கள்:

* முட்டை – 6

* தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது (நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* உப்பு – சுவைக்கேற்ப

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)

செய்முறை:

* முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் சிறிது உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளித்து, பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.

* பிறகு வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். அடுத்து மஞ்சள் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.

* பின்னர் அதில் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி, நன்கு கிளறி விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.

* முட்டை நன்கு வெந்ததும், கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான செட்டிநாடு முட்டை பொடிமாஸ் தயார்.

Related posts

புடலங்காய் பாசிப்பருப்பு கூட்டு

nathan

சுவையான உளுந்து இனிப்பு பணியாரம்

nathan

சுவையான உருளைக்கிழங்கு பீன்ஸ் சப்ஜி

nathan

சுவையான மஞ்ச பூசணி சாம்பார்

nathan

சுவையான… தட்டைப்பயறு குழம்பு

nathan

சுவையான செட்டிநாடு வெஜிடபிள் புலாவ்

nathan

அரைக்கீரைவைத்து சத்தான கொழுக்கட்டை செய்வது எப்படி?

sangika

மட்டன் வெங்காய மசாலா

nathan

சுவையான கேரட் சீஸ் சப்பாத்தி

nathan