26.8 C
Chennai
Thursday, Dec 4, 2025
1 onion vada 1663765308
சிற்றுண்டி வகைகள்

மாலை வேளையில் வெங்காய வடை

தேவையான பொருட்கள்:

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* கறிவேப்பிலை – சிறிது (பொடியாக நறுக்கியது)

* உப்பு – சுவைக்கேற்ப

* மைதா – 1 கப்

* அரிசி மாவு – 1 1/2 டேபிள் ஸ்பூன்

* பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – 1-2 சிட்டிகை

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

* தண்ணீர் – தேவையான அளவு

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு1 onion vada 1663765308

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து கையால் நன்கு பிசைய வேண்டும்.

* பின்னர் அதில் எண்ணெய் மற்றும் நீரைத் தவிர மைதா, அரிசி மாவு மற்றும் பிற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

Onion Vada Recipe In Tamil
* பின்பு கொஞ்சம் கொஞ்சமாக நீரை சேர்த்து சற்று கெட்டியான மாவாக பிசைந்து, மூடி வைத்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* பின் பிசைந்த மாவை சிறிது எடுத்து, வடை போன்று தட்டி, நடுவே விரலால் துளையிட்டு, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் வடைகளாக தட்டிப் போட்டு பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான வெங்காய வடை தயார்.

Related posts

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ராஜ் கச்சோரி

nathan

ஒக்காரை

nathan

ஆரோக்கியத்தைத் தரும் ராகி கூழ்

nathan

மட்டர் தால் வடை

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் ரைஸ் வெஜ் பால்ஸ்

nathan

வாழைப்பூ கட்லெட் செய்ய தெரிந்து கொள்ள வேண்டுமா…?

nathan

சுவையான… கீமா மொமோஸ்

nathan

ராஜ்மா அடை

nathan

மொறுமொறுப்பான பன்னீர் ஃபிங்கர்ஸ்

nathan