27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
food for weight loss
எடை குறைய

உடலில் தங்கியிருக்கும் கொழுப்பை வெளியேற்ற உதவும் 10 உணவுகள்

உடல் எடையை குறைக்க விரும்பினால், ஆரோக்கிய மற்ற உணவுகளை மட்டும் சாப்பிட்டு, உடற்பயிற்சி இயந் திரத்தில் நாள் முழுவதும் நேரத்தை செலவிட்டாலும் பலன் கிடைக்காது. நானும் உடல் எடையினை குறைத்து காட்டுகிறேன் பார் என்று கூறி அதிநவீன எந்திரங்கள் மூலம் உடல் நலத்தை கெடுத்துக்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களை செய் யாமல், உடல் எடையைக் குறைக்கும் குறிக்கோளை அடைய இயலாது. சந்தையில் பல்வேறு எடை குறைப்பு வாக்குறுதிகள் நிலவி வந்தாலும், அவை பெரும்பாலும் உண்மைக்குப் புறம்பானவையாகவும், உடலுக்கு ஆபத்தானவைகளாகவும் உள்ளன.

ஆனால் உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப் பாட்டுடன், எடை குறைப்பிற்கான ஒரு வழிமுறை உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பதாகும். இதற்கு உடனடி சிறந்த வழி, கொழுப்பை குறைக்கும் உணவுகளை வழக்கமான உணவில் சேர்த்துக் கொள்வதாகும்.

இங்கு எடை குறைப்பு திட்டத்தை எளிமையாகவும், பலனுள்ளதாகவும் மாற்ற கொழுப்பை குறைக்கும் உணவு வகைகளை கீழே கொடுத்துள்ளோம். அவற்றைப் படித்து உணவில் சேர்த்து பயன் பெறுங்கள்.

1. கால்சியம் : கால்சியம் எலும்பு மற்றும் பற்களுக்கு வலுவூட்டும் என்று பலர் சொல்வதைக் கேள்வி பட்டிருப்பீர்கள். ஆனால் அவை பசியை கட்டுப்படுத்து வதில் உதவுகிறது என்பதை அறிந்தால் ஆச்சர்யப் படுவீர்கள்.

பால் பொருட்கள் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பொருட்களை உண்ணுதல், கொழுப்பின் அடர்த்தியை குறைக்கவும், உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க முயற்சிக்கும் போது கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள்.

2. ஆப்பிள்கள்: தினசரி ஆப்பிள் உட்கொள்ளுதல் மருத்துவரை அணுகுவதை குறைக்கும். அதே வேளையில், கொழுப்புச் செல்களை குறைக்கவும் உதவுகிறது என்பது தெரியுமா! ஆம், ஆப்பிளின் தோல் எடை குறைப்பு குறிக்கோளை பூர்த்தி செய்யும் பல விந்தைகளை உள்ளடக்கியது. இதில் காணப்படும் பெக்டின் என்ற பொருள், உடற்செல்கள் கொழுப்பினை உறிஞ்சுவதை மட்டுப்படுத்துவதோடு, நீர்த்தன்மை யினால் கொழுப்பு சேர்க்கைகளை நீக்க உதவுகிறது.

3.வால்நட்: வால்நட்களில் ஒமேகா-3, ஆல்பா லினோலினிக் மற்றும் தன்னிறைவற்ற கொழுப்புச் சத்தை ஆரோக்கியமான அளவுகளில் கொண்டுள்ளது. இந்த தன்னிறைவற்ற கொழுப்புச்சத்தானது, பெரிய அளவில் நம் கொழுப்பை கரைக்க உதவுவதோடு, உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. ஆகவே ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்க சிறிதளவு வால்நட்கனை உட்கொள்ளுங்கள்.

4.பீன்ஸ்: பீன்ஸ் ஒரு குறைந்த கொழுப்பையும், க்ளைசீமிக் குறியீடு எனப்படும் மெதுவாக சக்தி வெளியிடும் தன்மையும், அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதச் சத்தையும் கொண்ட உணவு. இது சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு சிறந்த புரதச்சத்து தரும் உணவு. அத்துடன் இது கொழுப்பை வெளியேற்றி, உடலுக்கு நல்ல வளர்சிதை சுழலை வழங்குவதால், இது நல்ல முறை யில் கொழுப்பை கரைக்கும் உணவாக விளங்குகிறது.

5.இஞ்சி: இஞ்சியில் பல ஆச்சரியப்படத்தக்க குணங்கள் உள்ளன. இது அஜீரணத்தை குறைக்கவும், வயிற்று எரிச்சலை குறைக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் மற்றும் தசை மீட்புக்கும் உதவுகிறது. மேலும் இது சக்தியையும், கொழுப்பை கரைக்கும் செயல்களையும் ஊக்குவிப்பதனால், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவராயின் இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

6. ஓட்ஸ் : காலை உடற்பயிற்சிக்குப் பின்னர் அல்லது காலை நடைப்பயிற்சிக்குப் பின்னர் ஓட்ஸ் உணவு சேர்த்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ் உணவு மெதுவாக செரிமானமாவதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும், அதே சமயம் கொழுப்பைக் கரைய வைத்து விரைவுப் படுத்தவும் உதவுகிறது. இப்படி மெதுவாக செரிமான மாகும் தன்மையினால் எடையை குறைக்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் இது இன்றியமையாத உண வாகும்.

7. க்ரீன் டீ : க்ரீன் டீ எனப்படும் பச்சை தேயிலையில் உள்ள பல்வேறு குணங்கள், உடலில் தங்கியுள்ள கொழுப்புக் களை கரைப்பதோடு, புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மை கொண்டவை. ஆகவே நாள்தோறும் 12 டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.

8.மிளகு: மிளகை உபயோகிப்பதனால் உணவு உண்ட பின்னும்கூட சக்தி மற்றும் கொழுப்பு உடனடியாக வெளியேற்றப்பட்டு, உடலின் வளர்ச்சிதை மாற்றம் குறைந்த நேரத்திற்குள் விரைவுப்படுத்தப்படுகிறது. மேலும் இதில் உள்ள காப்சைசின் என்ற மூலப் பொருள், உடலின் அழுத்த அமிலங்களை விடுவித்து உடம்பிற்கு ஒரு தற்காலிக ஊக்கத்தை தருகிறது. இந்த முறையினால் உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்தி, சக்தியையும், கொழுப்பையும் கரைக்க உதவுகிறது.

9.தண்ணீர்: இது ஒரு உணவாக கருதப்படா விட்டலும், தேவையான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். உடலில் தண்ணீர் ஒரு இன்றி யமையாத ஒரு பாகமாகும். தேவையான தண்ணீர் குடிக்கவில்லையெனில், சில நிமிடங்களுக்குள் உடல் வறட்சியை உணரக்கூடும். சில சமயங்களில் தாக உணர்வினை பசி உணர்வு என்று தவறாக புரிந்து கொண்டு, தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக உண்ணத் தொடங்குகிறோம். எனவே கொழுப்பு கரைப்பிற்கு தண்ணீர் உதவுவதால், போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியமாகிறது.

10. முட்டை: முட்டை சிறப்பாக கொழுப்பை கரைக்கும் உணவுகளில் ஒன்று. இதன் மஞ்சள் கரு சக்தியையும், கொழுப்பையும் கரைக்க முக்கியமான தாகும். இதிலுள்ள கொழுப்புச்சத்து மிக சிறிய அளவில் தான் இரத்த கொழுப்பு அளவினை பாதிக்கிறது. மேலும், முட்டை உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங் களையும், புரதத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள தால், கொழுப்பை குறைக்க ஒரு நல்ல பொருத்தமான உணவுப் பொருளாக நிச்சயமாக கருத வேண்டியுள்ளது.
food for weight loss

Related posts

திடீரென உடல் எடை குறைவதற்கான 15 காரணங்கள்

nathan

உடல் எடையை குறைக்க இதை குடிங்க!….

sangika

உடல் எடை குறைக்க இந்த கொடியிடை அழகிகள் என்ன செய்தார்கள் தெரியுமா?

nathan

உடல் எடையை குறைக்க பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

nathan

தினமும் கிரீன் டீ குடித்தால் உடல் எடை குறையுமா?

nathan

2 மாதங்களில் 26 கிலோ எடையைக் குறைக்க உதவும் க்ரீன் காபி கேப்ஸ்யூல் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

nathan

உடல் எடையை குறைக்கும் கொள்ளு மிளகு ரசம் weight loss tips in tamil

nathan

எடையைக் குறைக்க என்ன வழி?

nathan

ஆடாமல், அசையாமல் உடல் எடையை குறைக்க உதவும் 7 எளிய வழிகள்!!!

nathan