28.1 C
Chennai
Saturday, Nov 16, 2024
515 fruit cake
சிற்றுண்டி வகைகள்

ஃபுரூட் கேக்

தேவையான பொருட்கள்:

மைதா – 1 கப்
வெண்ணெய் – 1/2 கப்
நாட்டுச் சர்க்கரை – 1/2 கப்
பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன் + 1/4 டீஸ்பூன்
பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன் + 1/8 டீஸ்பூன்
மசாலா பொடி – 1/2 டீஸ்பூன் (1 கிராம்பு, 1 பட்டை மற்றும் சிறு துண்டு ஜாதிக்காய்)
தேன் – 1/2 டேபிள் ஸ்பூன்
தயிர் – 3 டேபிள் ஸ்பூன்
வென்னிலா எசன்ஸ் – 1/2 + 1/4 டீஸ்பூன்
மசித்த உருளைக்கிழங்கு – 1/2 கப்
தண்ணீர் – 1/2 கப்

ட்ரை ஃபுரூட்ஸ்…

உலர் திராட்சை – 50 கிராம் (பொடியாக நறுக்கியது)
உலர் அத்திப்பழம் – 50 கிராம் (பொடியாக நறுக்கியது)
பேரிச்சம் பழம் – 25 கிராம் (பொடியாக நறுக்கியது)
பாதாம் – 25 கிராம் (பொடியாக நறுக்கியது)
பிஸ்தா – 25 கிராம் (பொடியாக நறுக்கியது)
முந்திரி – 25 கிராம் (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய், உலர் பழங்களான உலர் திராட்சை, பேரிச்சம் பழம், உலர் அத்திப்பழம், தேன், நாட்டுச்சர்க்கரை மற்றும் தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் சர்க்கரை மற்றும் வெண்ணெய் கரையும் வரை அடுப்பில் வைக்க வேண்டும்.

பின் தீயை அதிகரித்து, நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், மீண்டும் தீயை குறைத்து 20 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும். இந்நேரத்தில் உலர் பழங்களானது நன்கு மென்மையாக வெந்திருக்க வேண்டும்.

பின்னர் அடுப்பை அணைத்து, அதில் 1/8 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து நன்கு கிளறி குளிர வைக்க வேண்டும். அதே சமயம் ஒரு பௌலில் தயிர், வென்னிலா எசன்ஸ், மசாலா பொடி மற்றும் உலர் பழங்களின் கலவையை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு சேர்த்து, பின் பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மைதா, 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை நன்கு சலித்துக் கொண்டு, பின் அதனை உலர் பழங்களுடன் சேர்த்து ஓரளவு கெட்டியான பதத்திற்கு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின் மைக்ரோ ஓவனை 180 டிகிரி C-யில் சூடேற்ற வேண்டும். அதற்குள் பேக்கிங் ட்ரேயில் பட்டர் பேப்பரை விரித்து, பின் அதில் வெண்ணெய் மற்றும் மைதாவை தடவி, அதன் மேல் கலந்து வைத்துள்ள கேக் கலவையை கொட்டி, விருப்பமிருந்தால் அதன் மேல் சிறிது தோல் நீக்கப்பட்ட பாதாமை துண்டுகளாக்கி தூவி விட வேண்டும்.

இறுதியில் அதனை மைக்ரோ ஓவனில் வைத்து, 1 மணிநேரம் 15 நிமிடம் பேக்கிங் செய்து இறக்கி, டூத் பிக்கர் கொண்டு கேக்கின் நடுவே குத்தி எடுக்கும் போது, குச்சியில் மாவு ஒட்டாமல் இருந்தால், அதனை உடனே ஒரு ஈரமான துணியின் மேலே வைத்து, 15 நிமிடம் கழித்து, அதனை ஒரு தட்டில் தலைகீழாக தட்டி, அதன் மேல் உள்ள பட்டர் பேப்பரை எடுத்தால், முட்டை சேர்க்காத ஃபுரூட் கேக் ரெடி!!!

Related posts

சம்பா ரவை பொங்கல் செய்ய…!

nathan

சுவையான சத்தான கோதுமை ரவை இட்லி

nathan

பனீர் குழிப்பணியாரம்

nathan

அதிரசம்

nathan

வாழை இலை கொழுக்கட்டை

nathan

இனிப்புச்சீடை

nathan

பீர்க்கங்காய் தோல் துவையல்!

nathan

ஆந்திரா ஸ்டைல் கார்ன் வடை

nathan

பட்டர் பீன்ஸ் சுண்டல்

nathan