29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
eucalyptus
மருத்துவ குறிப்பு

மார்பு சளி குறைய யூகலிப்ட்ஸ் தீர்வு

கடுமையான மார்பு சளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியும் அதன் வலி. இதற்கு மருந்து, யூகலிப்ட்ஸ் இலையில் உள்ளது.

யூகலிப்ட்ஸ், சிறந்த நுண்ணுயிர் எதிரியாகும். இதன் இலைகளும், வேர்களும் மருத்துவ குண நலன்கள் கொண்டவை. நறுமணம் கொண்ட இலைகளிலிருந்து பெறப்படும் எண்ணெய், எளிதில் ஆவியாகக் கூடியது.

யூகலிப்டஸ் எண்ணெய், தோல் மற்றும் அழகு பராமரிப்புக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. இதன் எண்ணெய்க்காகவும், ரெசினிற்காகவும், மரத்திற்காகவும், பெருமளவு பயிரிடப்படுகிறது.
உலகிலுள்ள, மிக உயரமான மரங்களில், இவ்வகையும் ஒன்று. இதன் இலைகள் விரைப்பாக, பல வடிவங்களில் இருக்கும். இதன் மலர்கள் பம்பர வடிவில் சிவப்பு, வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் கொத்துக் கொத்தாக இருக்கும்.

கப்பல் கட்ட, தரைபோட, கருவிகள் செய்ய, இம்மரங்கள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. இதன் பசை போன்ற ரெசின், வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும், அருமருந்தாக உபயோகப்படுத்தப்படுகிறது. ஒப்பனை பொருள்கள் செய்வதிலும், சோப்புகள் தயாரிப்பிலும் உபயோகிக்கப்படுகிறது.

காயங்களில், பாக்டீரியாக்களினால் ஏற்படும், சீழ் வடிதலைக் தடுக்கும். உடலில் வெப்ப முண்டாக்குவதால், மார்பு சளி சம்பந்தப்பட்ட நோய்களைத் தீர்க்கும். இந்த மரத்தின் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும், மருத்துவ குணமுள்ள எண்ணெய், தலைவலி, ஜலதோஷம் போன்ற உபாதைகளுக்கு நல்ல மருந்து.

கொப்புளங்கள், சிறு காயங்கள் மற்றும் சிராய்ப்புகளையும் குணமாக்க பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்துமா, மார்பு சளி போன்ற சுவாச பிரச்னை இருந்தால், யூகலிப்டஸ் எண்ணெயை பயன்படுத்தலாம்.
eucalyptus

Related posts

மரிக்கொழுந்தை தலையணைக்கு அடியில் வைத்து படுத்தால் கிடைக்கும் நன்மை தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

தைராய்டு பிரச்சனைக்கான முக்கிய காரணங்கள்!!

nathan

உங்கள் மகனிடம் சொல்லக் கூடாத 6 வாக்கியங்கள்!

nathan

டீடாக்ஸ் எனும் நச்சு நீக்கம்… ஏன்? எப்போது? யாருக்கு?

nathan

கற்றாழையின் 10 முக்கியப் பலன்கள்..!! இதை முயன்று பாருங்கள்

nathan

கல்சியக் குளிசைகளும் மேலதிக கல்சியம் சேர்க்கப்பட்ட பால்மா வகைகளும் : வைத்தியர்.சி.சிவன்சுதன்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப கால தூக்கமின்மையை விரட்ட சில எளிய தந்திரங்கள்!!!

nathan

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை

nathan

உங்க காலில் இந்த அறிகுறிகள் இருந்தால் இரத்தத்தில் சர்க்கரை ஆபத்தான அளவில் இருக்குனு அர்த்தம்…

nathan