25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
ஆரோக்கியம்தொப்பை குறைய

தொப்பை குறைய உதவும் ரிவர்ஸ் க்ரஞ்சஸ் பயிற்சி

09e70b44-5722-4f5f-8df7-ede121ed7398_S_secvpf.gifதொப்பை குறைய எளிய பயிற்சி இப்போது உள்ள காலகட்டத்தில் அனைவரையும் கவலை அடைய செய்யவும் பெரிய பிரச்சனை எது என்றால் அது தொப்பை. உடல் உழைப்பு இல்லாத இந்த அவசர யுகத்தில் 10ல் 8 பேர் தொப்பை பிரச்சினையால் அவதிப்படுகின்றனர்.

இந்த தொப்பையை குறைக்க ஜீம்மில் செய்யப்படும் உடற்பயிற்சிகள் சற்று கடினமாக இருக்கும். ஆனால் வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான பயிற்சி ஒன்று உள்ளது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் தரையில் கால்களை நேராக நீட்டி, கைகளை உடலோடு ஒட்டி வைத்து மல்லாந்து படுக்க வேண்டும்.

உள்ளங்கைகள் தரையில் பார்த்த வண்ணம் இருக்க வேண்டும். இந்த நிலையில் இரண்டு கால் முட்டிகளையும் மடக்கி இடுப்பு வரை தூக்க வேண்டும். இது தான் ஆரம்ப நிலை. இந்த நிலையில் சில நிமிடங்கள் இருந்த பின்னர் அடுத்த நிலைக்கு வர வேண்டும்.

படத்தில் உள்ளபடி கால் முட்டியை மடக்கிய படி, கைகளை நன்றாக தரையில் ஊன்றி இடுப்பிற்கு மேல் தூக்க வேண்டும். இந்த நிலையில் சிறிது நேரம் இருந்த பின்னர் ஆரம்ப நிலைக்கு வர வேண்டும். இவ்வாறு இந்த பயிற்சியை ஆரம்பத்தில் 15 முறை செய்யலாம்.

பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30 முறை செய்ய வேண்டும். இந்த பயிற்சியை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் 3 மாதத்தில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

Related posts

தூங்கும் பழக்கம் எப்படி இருந்தாலும் தூங்குகிற முறை ஆறுதான். …

sangika

ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குகிறீர்களா?

sangika

த‌யி‌ரி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌ம்

nathan

குழந்தைகள் தூங்கும் போது கவனிக்க வேண்டியவற்றை நாம் அறிந்திருக்க மாட்டோம்

nathan

தினமும் 10 நிமிடம் தோப்புகரணம் செய்துவந்தால் கிடைக்கும் பலன்கள்!…

nathan

ஊஞ்சலின் மகத்தான் நன்மைகள் தெரியுமா உங்களுக்கு?…

sangika

சிசேரியன் பிரசவத்தால் வரும் பிரச்னைகள்

nathan

நல்லெண்ணெய்

nathan

உடனே ட்ரை பண்ணுங்க.! தொப்பையை சப்பையாக்க இப்படி ஒரு ட்ரிஸ்சா..?!

nathan