27.8 C
Chennai
Thursday, Mar 12, 2026
Beauty tips jpg 1218
சரும பராமரிப்பு

சருமத்திற்கு மென்மை, குளிர்ச்சி தரும் வெள்ளரிக்காய்

கருவளையம் நீங்க விரைவான, பாதுகாப்பான, எளிய வழி வெள்ளரிக்காயைப் பயன்படுத்துவதுதான் வெள்ளரியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் சிலிக்கா இணைந்து சருமத்துக்குப் புத்துணர்வூட்டி கருவளையத்தை போக்குகின்றன.

வெள்ளரிக்காயைக் கத்தரித்து, கண்கள் மேல் 20 நிமிடங்கள் வைத்திருப்பது அல்லது வெள்ளரிச் சாற்றைப் பருத்தியில் நனைத்து கண்களின் மீது 20 நிமிடங்களுக்கு வைத்திருப்பது நல்ல பலன் தரும்.

கண்வீங்கி போய் இருந்தால் வெள்ளரியைத் துண்டுகளாக நறுக்கி, கண்களைச் சுற்றி 20 நிமிடங்கள் வைத்தால் அதில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் கண்ணின் வீக்கத்தைப் போக்கும்.

வெள்ளரியை முகத்தில் தடவினால் முகம் பொலிவு பெறும். வெள்ளரிச் சாற்றுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகம் பொலிவு பெறும். கரும்புள்ளி போன்றவை நீங்கும்.

சூரியனில் இருந்து வரும் புறஊதாக் கதிர்வீச்சு, சருமத்தை பாதிக்கிறது. இதைத் தவிர்க்கும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு. மேலும் சருமத்துக்குக் குளிர்ச்சியூட்டி, மென்மையாக்குவதுடன் புற ஊதாக் கதிர்வீச்சால் ஏற்பட்ட பாதிப்பையும் போக்குகிறது.

வெள்ளரியில் உள்ள சிலிகான் மற்றும் கந்தகம், முடி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன. வெள்ளரியைச் சாறு எடுத்து தலையில் பூசி, 15-20 நிமிடங்கள் கழித்து சீயக்காய் அல்லது ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.
Beauty%20tips jpg 1218

Related posts

பார்லர் வேண்டாம்: வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஷேவிங் செய்யாமல் வேக்சிங் செய்வதற்கான காரணங்கள்!!!

nathan

கருப்பாக இருப்பவர்களுக்காக சில டிப்ஸ்

nathan

தக்காளி தரும் தங்க நிறம்!…

nathan

உங்கள் அழகை அதிகரிக்க ஒரு சிம்பிள் வழி சொல்லட்டுமா? நீங்கள் முப்பதுகளில் இருக்கிறீர்களா?

nathan

சருமத்திற்கு சில எளிய வீட்டு பராமரிப்பு முறை!…

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கருமையாக இருக்கும் முழங்காலை வெள்ளையாக்க சில சிம்பிளான டிப்ஸ்…

nathan

ப்ராவினால் உண்டாகும் தழும்பை எப்படி மறையச் செய்யலாம்?

nathan

வெயில் காலத்தில் செய்ய வேண்டியவை

nathan