தேவையானவை:
மினி இட்லிகள் – 40
நெய் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்
அரைக்க:
கறிவேப்பிலை – 3 கப்
கடலைப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
கடுகு – அரை டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
செய்முறை:
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் எண்ணெய் விடாமல் சிவக்க வறுத்து ஆறியதும், மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்தால் கறிவேப்பிலை பொடி ரெடி. மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி உருகியதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் மினி இட்லி, கறிவேப்பிலைபொடி சேர்த்து மீதம் இருக்கும் நெய்யை சிறிது, சிறிதாக ஊற்றி கிளறி இறக்கிப்பரிமாறவும்.