22.8 C
Chennai
Wednesday, Jan 8, 2025
4b55000b 2339 4742 a83c 27e27e8199be S secvpf
உடல் பயிற்சி

ஆபத்துக்கு உதவும் உடற்பயிற்சி

தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும்போது, இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் கார்டியோ வாஸ்குலார் தொகுப்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. இதனால் குத்துச்சண்டை, பளுதூக்குதல் போன்ற கடினமான உடற்பயிற்சிகளையும் எளிதாக செய்ய முடியும்.

மேலும் கற்பழிப்பு, கடத்தல் போன்ற எதிர்பாராத ஆபத்துக்களில் இருந்தும் உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ள முடியும். எதிர்பாராமல் நடக்கும் ஆபத்துக்களுக்கு காரணம் நமது தனிமையும், அழகும், நம்மிடம் இருக்கும் உடைமைகளும்தான். இவற்றை இன்னொருவர் கைப்பற்ற நினைக்கும்போது ஆபத்து நமக்கு மிக அருகில் வருகிறது.

நவீன ஜிம்களில் இதயத் தசைகளுக்குத் தேவையான உடற்பயிற்சிகள் மற்றும் தற்காப்பு யுக்திகள் கற்றுத் தரப்படுகின்றன. அவைகளை முழுமையாக கற்றுக் கொள்ள அகன்ற பரப்புடன் கூடிய வசதியான உடற்பயிற்சிக் கூடத்தை தேர்ந்தெடுங்கள். அங்கு குத்துச்சண்டைக்குப் பயன்படுத்தும் பேடுகள் மற்றும் தரைவிரிப்புகள் போன்றவை வசதியாக உள்ளனவா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள். அத்துடன், உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து முனைப்புடன் செய்யும் வழிமுறைகள், கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் போன்றவை பற்றியும் அவர்கள் கற்றுத்தர வேண்டும்.

உடல்நலக்குறைவால் அவதிப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள், எலும்பு, மூட்டு இணைப்புகள் ஆகியவற்றைப் பராமரிக்கும் விதம் மற்றும் முதுகு வலியைப் போக்கும் உடற்பயிற்சிகள் போன்றவை முறையாக கற்றுத்தரப்பட வேண்டும். ஆரம்ப காலத்தில் பயிற்சி பெறுபவர்கள் ஒரு மணி நேரத்திற்கு 700 கலோரிக்கான சக்தியை செலவிடுகின்றனர்.

முதலில் குறைந்த நேரம் மட்டுமே ஒதுக்கும் பயிற்சியாளர்கள், நாளடைவில் பயிற்சியின் மேல் உள்ள ஆர்வத்தில், படிப்படியாக அதிகளவு நேரத்தை ஒதுக்குகிறார்கள். முறையாக செய்யப்படும் உடற்பயிற்சியே பெண்களுக்கு தேவையான முழு ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் தரும்.
4b55000b 2339 4742 a83c 27e27e8199be S secvpf

Related posts

உடல் எடை குறைத்து, மெல்லிய உடல் பெற உதவும் சிறந்த காம்போ உணவுகள்!!

nathan

உயரமாக வளர உதவும் உடற்பயிற்சிகள்

nathan

உடலுறவு சிறப்பாக அமைய சில யோகாசனங்கள்

nathan

ஏரோபிக்ஸ் பயிற்சியின் போது கவனம் தேவை

nathan

உடல் எடையை குறைக்கும் அறுவை சிகிச்சை! ஏற்படும் நன்மைகள் என்ன?

nathan

தொடை சதையை குறைக்க வேண்டுமா

nathan

இந்த நாட்களில் உடற்பயிற்சி செய்யவேண்டாம்

nathan

மூன்றே மாதத்தில் பி.சிஓ.டி -க்கு முடிவு!

nathan

அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் கட்டாயம் இதை படியுங்கள்….

sangika