26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
inner21552479124
Other News

இந்த ராசிப்பெண்கள் அப்பாக்களின் – செல்ல மகள்கள்

ஒவ்வொரு மனிதனும் பிறக்கும்போது தன்னுடைய விதியையும் சுமந்துகொண்டுதான் பிறக்கிறான். எனினும், சில அதிர்ஷ்டசாலிகள், தாங்களும் ஆனந்தமாய் வாழ்வதுடன், தங்களுக்கு நெருக்கமாக மற்றும் அன்பாக இருப்பவர்களின் வாழ்க்கையையும் பிரகாசிக்க செய்கிறார்கள்.

சனாதன தர்மத்தில் பெண் குழந்தைகள் அன்னையின், தேவியின் வடிவமாக கருதப்படுகிறார்கள். நவராத்திரியின் போது பெண் குழந்தைகளை வழிபடுவது நமது வழக்கம். அதே நேரத்தில், பெண்களுக்கு வீட்டின் லட்சுமி என்ற அந்தஸ்தும் வழங்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, பெண் குழந்தைகளையும் பெண்களையும் போற்றும் கலாச்சாரம் நமது!!

பொதுவாக பெண் குழந்தைகள் தந்தைகளுக்கு மிகவும் பிடித்தவர்களாக இருப்பார்கள். தந்தை மகளுக்கு இடையிலான பாசம் தனி வகையை சார்ந்தது, மிகவும் அழகானது. ஜோதிட சாஸ்திரத்தின் படி இந்த 3 ராசிகளில் (Zodiac Sign) உள்ள பெண் குழந்தைகள் தந்தைக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவார்கள். அந்த ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

கடக ராசி (Cancer)

கடக ராசிப் (Caner) பெண்கள் தங்கள் தந்தை மற்றும் குடும்பத்திற்கு மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். ஜாதகத்தின் கிரகங்கள் சரியாக இருந்தால், இந்த பெண்கள் பிறந்ததில் இருந்து, அவர்கள் வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செல்வச் செழிப்பு அதிகரிக்கத் தொடங்குகிறது. தந்தைக்கு பதவி உயர்வு வரும், வருமானம் கூடும். மேலும், இந்த பெண்கள் மிகவும் திறமையானவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் அனைத்து வேலைகளையும் முழு ஈடுபாட்டுடன் செய்து மிக இளம் வயதிலேயே பெரிய வெற்றியை அடைகிறார்கள்.

கன்னி ராசி(Virgo)

கன்னி ராசி பெண்களும் தங்கள் தந்தைக்கு மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். இவர்கள் தங்களது திறமையால் தங்கள் தந்தை மற்றும் குடும்பத்தின் பெயரை உச்சத்திற்கு கொண்டு செல்வார்கள். இந்த பெண்களுக்கு பல வித கலைகளில் ஆர்வம் அதிகமாக இருக்கும். இந்த துறைகளில் இவர்கள் பெயரும் புகழும் பெறுவார்கள். இவர்கள் சிறு வயது முதலே புத்திசாலிகளாக இருக்கிறார்கள்.

மகர ராசி (Capricorn)

மகர ராசி (Capricorn) பெண்கள் மிகவும் கடின உழைப்பாளிகள், நேர்மையானவர்கள், மிகவும் அன்பானவர்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தை மிக பாசமாக கவனித்துக்கொள்கிறார்கள். வீட்டில் உள்ள அனைவரின் மீதும், குறிப்பாக தந்தை மீது அதிக பாசம் காட்டுகிறார்கள், அன்பை பொழிகிறார்கள். இந்த பெண்களுக்கு தந்தையுடன் மிகவும் வலுவான உறவு இருக்கும்.

இந்த பெண்கள் வேலை, வியாபாரம் என இரண்டிலும் வெற்றி பெறுவார்கள். மகர ராசிப்பெண்கள் தங்கள் இலக்குகளை அடைய மிகவும் தீவிரமாக உழைப்பார்கள். இலக்கை அடைந்த பின்னரே நிம்மதி அடைகிறார்கள். இந்த குணங்கள் இவர்களை மிகவும் பிரபலமாக்குகின்றன.

 

Related posts

படு மார்டனாக மாறிய ராஜலட்சுமி!புகைப்படம்

nathan

மருமகளை நிர்வாணப்படுத்தி சூடு வைத்த மாமியார்!

nathan

சிசேரியன் மூலம் குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்கள் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்!

nathan

BIGGBOSS ரித்விகா கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை

nathan

இந்த ராசிக்காரங்க சுயநலத்திற்காக ஊரையே ஏமாத்துவாங்களாம்…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… பெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்கும் விடயங்கள்..!!

nathan

பொது நிகழ்ச்சிக்கு கிளாமராக வந்துள்ளார் நடிகை ஷில்பா ஷெட்டி.

nathan

நயன்தாராவின் மகன்களா இது! நன்றாக வளர்ந்துவிட்டார்களா..

nathan

பேருந்தை கனவு வீடாக மாற்றிய ஆஸ்திரேலிய தம்பதியினர்!

nathan