26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
sl3601
சிற்றுண்டி வகைகள்

வெல்லம் கோடா

என்னென்ன தேவை?

கோடா (ஹோம் மேட் பாஸ்தா) – 1/4 கிலோ,
வெல்லம் – ஒரு டம்ளர்,
கடலைப் பருப்பு – 1/4 டம்ளர்,
தேங்காய் – 2 பத்தை,
ஏலக்காய் – 3,
நெய் – 1 1/2 டேபிள்ஸ்பூன்,
பால் – ஒரு டம்ளர்,
குங்குமப்பூ – 5 இதழ்கள்,
நட்ஸ் (முந்திரி, பிஸ்தா, பாதாம், கிஸ்மிஸ் பழம்) – 50 கிராம்.
எப்படிச் செய்வது?

கோடாவை 1/2 டேபிள்ஸ்பூன் நெய்யில் லேசாக வறுத்துக் கொள்ளவும். பாதி நட்ஸ் வகைகளை சிறிது பால் சேர்த்து அரைத்து வைக்கவும். வெல்லத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து லேசாக சூடாக்கி, வடித்து வைக்கவும். கடலைப் பருப்பை கிள்ளு பதமாக, சுண்டலுக்குப் போடுவது போல் வேக வைத்து லேசாக மசித்து வைக்கவும். பாலை ஏலக்காய் சேர்த்து காய்ச்சவும். கொதி வந்ததும், வறுத்து வைத்திருக்கும் கோடாவையும் அரைத்து வைத்திருக்கும் நட்ஸையும் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் கடலைப் பருப்பு, வெல்லக் கரைசலை சேர்க்கவும். தேவைக்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். நட்ஸ் வகைகள், தேங்காயை மீதமிருக்கும் நெய்யில் வறுத்து கடைசியாக சேர்த்துக் கிளறவும். கடைசியில் குங்குமப்பூவை தூவி இறக்கவும்.

*கோடா எப்படிச் செய்வது? 1 கிலோ மைதா (அ) கோதுமை மாவில் சிறிது உப்புச் சேர்த்து புரோட்டாவுக்குப் பிசைவது போல் சிறிது தளர்த்தியாகப் பிசையவும். உருண்டைகளாக போட்டு நல்ல மாவு தேய்த்து மெல்லியதாக திரட்டி ஒரு பேப்பரில் வெயிலில் காயவைக்கவும். இரண்டு பக்கமும் காய்ந்ததும் அதை குறுக்கும் நெடுக்குமாய் டைமண்ட் ஷேப்பில் கஜுருக்கு வெட்டுவது போல் வெட்டி மறுபடி நல்ல மொறு மொறுப்பாக காயவைத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்து தேவைக்கு எடுத்து (சேமியா, மக்ரோனி, பாஸ்தா, ஸ்பெகடிக்கு பதில் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

sl3601

Related posts

கேரளத்து ஆப்பம் செய்முறை

nathan

இளநீர் ஆப்பம்

nathan

சுவையான சாப்பிடுவதற்கு ஏற்ற மிளகாய் பஜ்ஜி

nathan

சுவையான… ஆலு ஸ்டஃப்டு கேப்சிகம்

nathan

உருளைகிழங்கு ரெய்தா

nathan

மாலை நேர நொறுவை! – பிரெட் போண்டா

nathan

சுவையான சத்தான மசாலா ஸ்வீட் கார்ன்

nathan

கருப்பு உளுந்து மிளகு தோசை

nathan

சுவையான சத்தான கோதுமை ரவை பொங்கல்

nathan