28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
05 1430798015 7eightlifestylechangesneededat30
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு முப்பது வயசு ஆகபோகுதா? அப்ப இதெல்லா நீங்க கண்டிப்பா மாத்திக்கணும்!!!

எல்லா வயதிலும் நமது உடலும், மனதும் ஒரே மாதிரி இருப்பது கிடையாது. ஆனால், நமது பழக்கவழக்கங்கள் மட்டும் “தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்” என்பது போல ஒரே மாதிரி இருக்கும். வாழ்வியல் முறையில் இது ஒரு தவறான அணுகுமுறை ஆகும்.

சாப்பிடும் உணவில் இருந்து, தூங்கும் நேரம் வரை வயதிற்கு ஏற்றார் போல பழக்கவழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம். கல்லையும் கரைக்கும் பதின் வயது (Teen Age) என்பார்கள் என்பார்கள். ஆனால் நாற்பதை எட்டும் போது கால் கிலோ கறியைக் கரைப்பதே சிலருக்கு கடினம்!

இது, போல நீங்கள் முப்பது வயதை எட்டும் போது, உங்கள் உடல்நிலையும், மனநிலையும் நன்றாக இருக்க சில வாழ்க்கை பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்…..

விஷத்தை குறைத்துக் கொள்ளுங்கள்

மது, புகை மட்டுமல்ல, நீங்கள் விரும்பி சாப்பிடும் எண்ணெய் சத்து, கொழுப்புச்சத்து அதிகமுள்ள நொறுக்கு தீனிகள், பிஸ்கட்டுகள், என அனைத்தையும் குறைத்துக் கொள்வது அவசியம். வயது ஏற, ஏற உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும், அந்த நேரத்திலும் நீங்கள் உடலுக்கு விஷமாக அமையும் இந்த உணவுகளை அதிகமாக உட்கொண்டு வந்தால், உடல்நிலை குறைபாடு அதிகமாக ஏற்படும்.

உடற்பயிற்சி

இதுநாள் வரை உடற்பயிற்சி செய்யாவிட்டாலும் இனிமேலாவது உடற்பயிற்சி செய்யுங்கள். ஜிம்மிற்கு தான் போக வேண்டும் என்வது கட்டாயம் கிடையாது. போனால், உடற்திறனை கொஞ்சம் அதிகமாக பேணிக்காக்க முடியும். அல்லது தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் 30 நிமிடங்கள் வாக்கிங், ஜாக்கிங் போன்றவற்றில் ஈடுபடலாம்.

உறவுகள் முக்கியம்

வேலை, வேலை என்று மெட்ரோ ரயிலை போல நிக்காமல் ஓடிக்கொண்டிருக்காமல் உங்கள் வாழ்வில் உங்களோடு பயணித்து வரும் உறவுகளையும் கொஞ்சம் ஏறெடுத்து பாருங்கள். வேலை தரும் மன அழுத்தத்தை குறைக்க உலகிலேயே சிறந்த மருந்து உறவுகள் தான்.

சேமிப்பு பணம்

சேமித்து வைப்பது அவசியம், உங்களுக்கு இல்லாவிட்டாலும் உங்களது வீட்டில் உள்ளவர்களுக்கு, உங்கள் தாய், தந்தை, மனைவி. முப்பதை கடக்கும் போது கண்டிப்பாக சில உடல்நல குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. நமது உணவு பழக்கத்தின் மாறுபாட்டினால், இப்போது எல்லாம் நீரிழிவு நோய் யாருக்கு, எப்போது வருகிறது என்றே தெரிவதில்லை.

உறக்கம்

மிக மிக ம் முக்கியமானது உறக்கம். சரியான நேரத்தில், சரியான அளவு உறக்கம் தேவை. தூக்கமின்மை தான் பல உடல்நல குறைபாடுகள் ஏற்பட காரணமாக இருக்கின்றது. எனவே, எந்த வேலையாக இருந்தாலும் இரவு சரியான நேரத்தில் உறங்க வேண்டியது கட்டாயமான ஒன்றாகும்.

பல்லு முக்கியம்

முப்பதை கடக்கும் போது பலருக்கு ஏற்படும் முதல் வலி, பல் வலி தான். எனவே, பல்லை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். பின், ஆரோக்கியமான உணவாகவே இருந்தாலும் மென்று சாப்பிட முடியாமல் போய் விடும்.

நண்பர்கள்

வேலைக்கு சேர்ந்த பிறகு நண்பர்களுடனான நெருக்கம் குறைந்திருக்க வாய்ப்பிருக்கிறது, நட்பை புதுப்பித்துக் கொள்ளுங்கள். நண்பர்களை விட வேறு யாரும் உங்களை மகிழ்வாய் வைத்துக்கொள்ள முடியாது. உங்கள் மனதை உறுதியாய் வைத்துக் கொள்ள ஒரே மருந்து நண்பர்கள் தான்.

முன்னெச்சரிக்கை

இதுவரை எந்த பாதுகாப்பு காப்பீடுகள் எடுத்து வைத்துக்கொள்ளவில்லை எனிலும், முதல் வேலையாக ஓர் குடும்ப மருத்துவ காப்பீட்டை துவங்குங்கள். அது மிகவும் உதவியாக இருக்கும்.

05 1430798015 7eightlifestylechangesneededat30

Related posts

பெண்களின் இந்த 6 முக்கிய அம்சங்கள் தான் ஆண்களைக் கவருகிறது என்று தெரியுமா?

nathan

சளியால் உங்க மூக்கு ரொம்ப ஒழுகுதா? இதோ எளிய நிவாரணம்!

nathan

கருத்தரிக்க விரும்பும் தம்பதியர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை

nathan

டயாலிசிஸ் செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை

nathan

இறுதி நாட்களில் மட்டுமே வெளிப்படுத்தும் கொடூரமான நோய்கள்

sangika

உங்களுக்கு தெரியுமா ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது கடுகு

nathan

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உயர் இரத்த அழுத்தம்! தெரிந்துகொள்வோமா?

nathan

மூலநோய் வருவதற்கான காரணங்கள் என்ன?

nathan

உங்களுக்கு தெரியுமா கேன்சர் ஏன் வருகிறது? தடுக்க என்ன வழி?

nathan