25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1eb226fb c0eb 4d8e ae56 0a2349524d08 S secvpf
சைவம்

சத்து நிறைந்த வேர்க்கடலை சாதம்

தேவையான பொருட்கள் :

சாதம் – முக்கால் கப் (உதிரியாக வடித்தது)

வறுத்து பொடிக்க:

வேர்க்கடலை – அரை கப்
எள்ளு – ஒரு தேக்கரண்டி
உளுந்து – ஒரு தேக்கரண்டி (விரும்பினால்)
மிளகாய் வற்றல் – 4
தேங்காய் துருவல் – 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை – 2 கொத்து
மிளகு – அரை தேக்கரண்டி

தாளிக்க:

நல்லெண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் – சிறிது
உப்பு, மஞ்சள் தூள்

செய்முறை :

• வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி வைக்கவும்.

• வெறும் கடாயில் மிளகாய் வற்றல், மிளகு, எள் மற்றும் உளுந்தை வறுக்கவும். பிறகு தேங்காய் துருவலுடன் கறிவேப்பிலையைச் சேர்த்து வறுத்தெடுக்கவும்.

• மிக்ஸியில் வேர்க்கடலையைத் தவிர மற்ற அனைத்தையும் போட்டு பொடித்துக் கொண்டு, பிறகு அத்துடன் வேர்க்கடலையையும் சேர்த்து கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

• கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டவும்.

• அதனுடன் சாதம் மற்றும் வேர்க்கடலைப் பொடியைச் சேர்த்து, 2 நிமிடங்கள் சிறு தீயில் வைத்து பிரட்டி இறக்கவும்.

• சுவையான வேர்க்கடலை சாதம் தயார்.

1eb226fb c0eb 4d8e ae56 0a2349524d08 S secvpf

Related posts

கறிவேப்பிலை சாதம்

nathan

பேச்சுலர் சமையல்: வெங்காய சாம்பார்

nathan

கோவைக்காய் வறுவல்

nathan

புதினா சாதம்

nathan

ப்ரோக்கோலி பொரியல்

nathan

சோலே பன்னீர் கிரேவி

nathan

மஷ்ரூம் தொக்கு

nathan

சூப்பரான கேழ்வரகு சேமியா வெஜிடபிள் பிரியாணி

nathan

அப்பளக் குழம்பு

nathan