தலையில் வளரும் ஒவ்வொரு முடியும், மூன்று முதல் நான்கு மாதங்கள் நீடிக்கும். பின், அது உதிர்ந்து, வேறு முடி முளைக்கும். இந்த வகையில், நாம், 30 முதல் 50 முடிகளை இழக்கிறோம். ஷாம்பூ போட்டு குளிப்பது, கூந்தலை பாதிக்கும் என்பது தவறான கருத்து. ஷாம்பூ, மண்டையோட்டு பகுதியை சுத்தமாக்கி, இறந்த செல்களை அகற்றும்.
கண்டிஷனர் உபயோகிப்பது, கூந்தலை பளபளப்பாக மென்மையாக வைத்திருக்கத்தானே தவிர, அதற்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் எந்த தொடர்புமில்லை. பிரசவ காலத்தில் முடி உதிர்வது சகஜமே. பிரசவமான மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு இப்படி இருக்கலாம். அது தற்காலிகமானது. உடல் சகஜ நிலைக்கு திரும்பியதும், முடி மீண்டும் வளரும்.
சில வகை மருந்து, மாத்திரைகளுக்கும் முடி உதிர்தலுக்கும் நேரடித் தொடர்பு உண்டு.
உதாரணமாக, கருத்தடை மாத்திரைகளை உட்கொள்பவர்களுக்கு, முடி உதிர்வு அதிகமிருக்கும்.
உடல் இளைக்க, “டயட்டில்’ இருப்பவர்களுக்கு, முடி உதிரலாம். எனவே, மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே, “டயட்டை’ கடைப்பிடிப்பது நல்லது.
எண்ணெய் பசையுள்ள சருமம் உடையவர்கள், அடிக்கடி குளிர்ந்த தண்ணீரால் முகம் கழுவ வேண்டும். சோப் உபயோகிப்பதை தவிர்த்து, “பேஸ் வாஷ்’ கொண்டு முகம் கழுவலாம். உட்கொள்ளும் உணவில் அதிகம் எண்ணெய் இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். முகத்தில் பருக்களோ, கட்டிகளோ இருக்கும் போது, பேஷியல் செய்வதை தவிர்க்க வேண்டும். பேஷியல் என்பது முகத்திற்கான மசாஜ். எனவே, பருக்களோ, கட்டிகளோ இருக்கும்போது மசாஜ் செய்தால், அது மேலும் அதிகமாகி, முக அழகையே கெடுத்து விடும்
Related posts
Click to comment