27.9 C
Chennai
Tuesday, Nov 19, 2024
1454754653 9961
மருத்துவ குறிப்பு

அல்சரால் அவதிபடுவோர் குணமடைய பின்பற்றவேண்டிய வழிமுறைகள்

இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள்தான், நாம் உண்ணும் உணவின் செரிமானத்துக்கு உதவுகின்றன.

இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன.

இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி (breakdown)ஏற்படும்போது அமிலமானது இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதித்து சிவந்து வீக்கம் மற்றும் வலியுடன் கூடிய புண்ணை (ulcer) ஏற்படுத்துகிறது.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம்.

ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.

கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம். வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.

மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணலாம். பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம்.

சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம்.

சேர்க்க வேண்டியவை:

கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர். இள நுங்கு.

தவிர்க்க வேண்டியவை:

அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி.

கடைப்பிடிக்க வேண்டியவை:

காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும். பரபரப்பைத் தவிர்த்தல் அவசியம். தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். சரியான நேரத்துக்குத் தூக்கம் அவசியம்.

1454754653 9961

Related posts

உங்களுக்கு தெரியுமா வறுத்த பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் இதுதான் நடக்குமாம்!

nathan

பற்களுக்கு அடியில் வெங்காயத்தை இப்படி வையுங்கள்!இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan

சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுப்பது எப்படி…?

nathan

எலுமிச்சையின் அற்புத மருத்துவக் குணங்கள்!

nathan

அவசியம் படிக்க..சர்க்கரை நோயை அடியோடு விரட்டும் ஆயுர்வேத மருந்துகள்!

nathan

சிறுநீரகம் காப்போம்!

nathan

இரவு தூங்குவதற்கு முன்பு அனைவரும் செய்ய வேண்டிய ஸ்மார்டான விஷயங்கள்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

nathan

உங்க பற்களின் வடிவம் உங்கள் விதியை எப்படி நிர்ணயிக்கிறது தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan