உலகம் முழுவதிலுமிருந்து கோழியுடன் பல சுவையான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. அதில் ஒன்று சிக்கன் சாப். இந்த சிக்கன் சாப்ஸ் ஒரு சிறந்த ஸ்டார்டர் மற்றும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களால் விரும்பப்படுகிறது. நீங்கள் கடையில் சிக்கன் சாப்ஸ் வாங்கி சாப்பிட்டீர்கள். ஆனால் அந்த சிக்கன் சாப் ரெசிபியை வீட்டிலேயே செய்தால், எவ்வளவு வேண்டுமானாலும் செய்யலாம், இல்லையா?
எனவே வீட்டில் சிக்கன் சாப் செய்முறையை எப்படி செய்வது படித்து சுவைத்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் கொத்துக்கறி – 300 கிராம்
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
* முட்டை – 1
* இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* புதினா இலைகள் – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
* பிரட் தூள் – சிறிது
செய்முறை:
* ஒரு பௌலில் சிக்கன் கொத்துக்கறியை நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், முட்டை, இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி, புதினா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை ஃப்ரிட்ஜில் வைத்து 15 நிமிடம் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், சிக்கன் கலவையை சிறு சிறு உருண்டைகளாக அல்லது உங்களுக்கு வேண்டிய வடிவில் உருட்டி, பின் அதை பிரட் தூளில் பிரட்டி எடுத்து, எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்தையும் பொரித்து எடுத்தால், சுவையான சிக்கன் சாப்ஸ் தயார்.