24.9 C
Chennai
Tuesday, Jan 21, 2025
threading
முகப் பராமரிப்பு

மூக்கு பராமரிப்பு

மூக்கின் பராமரிப்பு மிகவும் எளிது, ரெகுலரான பேஷியல் கூட போதும். வீட்டிலேயே பேஷியல் செய்வது போல் எண்ணெய்ப் பசை உள்ள நல்ல பேஸ் மசாஜ் க்ரீமை மூக்கிற்கு நன்றாக தடவி, மசாஜ் செய்ய வேண்டும். மூக்கில் பிளாக் ஹெட்ஸ் உள்ளவர்கள், விரல்களால் மூக்கின் பக்கவாட்டிலும், நுனியிலும் அதிக நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் கொதித்த நீரை ஊற்றி, நன்றாக வேர்க்கும் வரை ஆவி பிடிக்க வேண்டும்.

இப்போது வெளிச்சமான இடத்தில் அமர்ந்து, கண்ணாடியைப் பார்த்து பிளாக் ஹெட்ஸ் இருக்கும் இடங்களில் பிளாக் ஹெட் ரிமூவரால் (பேஷியல் கிட்டில் இருக்கும்) மெதுவாக அழுத்த வேண்டும். இப்படியே மூக்கில் உள்ள பிளாக், ஒயிட் ஹெட்ஸ் முழுவதுமாக நீக்கி விடலாம்.

இப்போது குளிர்ந்த நீரில் மூக்கினை நன்றாக கழுவினால் போதும். மூக்கிற்கு மேக்கப்போடும் போது நமது மூக்கு ஷேப்பை கவனித்து அதற்கு தகுந்தாற்போல் மேக்கப் செய்யவேண்டும். சப்பையான மூக்கு உள்ளவர்கள் முகத்திற்கு பவுண்டேஷன் மற்றும் பவுடர் அப்ளை செய்த பிறகு, முகநிறத்தை விடகொஞ்சம் ஒரு ஷேடு குறைவான டார்க் நிறத்தில் உள்ள ரூஜை மூக்கின் இரு ஓரங்களிலும், அதாவது இருபுருவத்தின் ஆரம்பங்களிலிருந்தும் மூக்கு அடி வரை, நேராக தடவ வேண்டும்.

இப்போது நடுபக்கம் மட்டும் லைட்டாகவும், ஓரங்கள் பளிச்சென்று தெரியாதது போலவும் இருக்கும். சப்பை மூக்கு என்று பார்த்தால் தெரியாது. இதே போல் ஒரு பக்கம் சிறிது அகலமாகவும், ஒரு பக்கம் சரியாகவும் உள்ள மூக்கு தோற்றமுள்ளவர்கள் ஒரு பக்கம் மட்டும். நார்மலான மூக்கு ஷேப் உள்ளவர்களும் செய்து கொள்ளலாம், மூக்கு அழகாக தெரியும்.

threading

Related posts

துவரம் பருப்பு,பீட்ரூட் சாறு, மற்றும் கோதுமை மாவை பயன்படுத்தி பேசியல் செய்வது எப்படி?

nathan

உங்களுக்கு நெற்றியில் இப்படி பருக்கள் வருதா? அப்ப இத படிங்க!

nathan

புதினாவைக் கொண்டு முகத்தினை தங்கம் போல் மின்னச் செய்யும் ஃபேஸ்பேக்

nathan

இதோ உங்க பளிச் முகத்துக்கு ஹெர்பல் மாஸ்க்ஸ்!

nathan

ஈரப்பதத்தை தக்க வைக்கும் ஃப்ரூட் பேஷியல்

nathan

நீங்கள் அழகான சருமத்தை பெற செர்ரி பழத்தை இப்படி பயன்படுத்துங்கள்! செய்முறை உள்ளே…

nathan

கற்றாளையைப் பயன்படுத்தி சருமத்தின் பொலிவை பேண முடியும்.

sangika

தேன் மற்றும் எலுமிச்சை மாஸ்க்

nathan

முகத்தில் உள்ள அழுக்கை நீக்கும் ஸ்கரப்

nathan