29.3 C
Chennai
Thursday, Jan 23, 2025
kathirikaikarakulamburecipe
சமையல் குறிப்புகள்

கத்திரிக்காய் கார குழம்பு

தேவையான பொருட்கள்:

* கத்திரிக்காய் – 1/2 கிலோ

* சின்ன வெங்காயம் – 10 (தோலுரித்தது)

* புளி – 1 எலுமிச்சை அளவு

* உப்பு – சுவைக்கேற்ப

* சர்க்கரை – 1/2 டீஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது

* நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

கார மசாலாவிற்கு…

* பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)

* தக்காளி – 2 (நறுக்கியது)

* மல்லி – 2 டேபிள் ஸ்பூன்

* வரமிளகாய் – 5

* தேங்காய் – 1/2 கப்

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு…

* நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

கார மசாலா செய்வதற்கு…

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

* பின் அதில் மல்லி மற்றும் வரமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் தேங்காயை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

* பின்பு அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதேப் போல் புளியை நீரில் ஊற்றி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

குழம்பு செய்வதற்கு…

* இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும்.

* பிறகு அதில் கத்திரிக்காயை சேர்த்து 5 நிமிடம் வதக்கி, பின் புளிச்சாற்றினை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி நன்கு 30 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* குழம்பு நன்கு கொதித்து, எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பிக்கும் போது, அதில் கொத்தமல்லியைத் தூவ வேண்டும்.

* இறுதியாக ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குழம்பில் ஊற்றி கிளறினால், சுவையான கத்திரிக்காய் கார குழம்பு தயார்.

Related posts

சுவையான கத்திரிக்காய் புளிக்குழம்பு

nathan

கத்திரிக்காய் கார குழம்பு – kathirikai kara kulambu

nathan

சுவையான மோர் ஃப்ரைடு சிக்கன்

nathan

சூப்பரான முட்டை ப்ரைடு ரைஸ்!

nathan

சுவையான இரும்புச் சத்து, நார்ச்சத்து நிறைந்த தேங்காய் பால் ரசம்

nathan

சூப்பரான முட்டை நூடுல்ஸ்

nathan

ஓட்ஸ் தோசை

nathan

ருசியான சீஸ் பாஸ்தா செய்வது எப்படி?

nathan

ருசியான அவல் கார பொங்கல்!….

sangika