இன்றைய கால கட்டத்தில் சருமத்தில் சுருக்கங்கள் விரைவில் வர ஆரம்பிக்கிறது. இதனால் இளமையிலேயே முதுமைத் தோற்றத்தில் காட்சியளிக்க நேரிடுகிறது. ஆகவே பலர் தங்களது சருமத்தில் உள்ள சுருக்கத்தைப் போக்க பல்வேறு அழகு சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.
பொதுவாக சருமத்தில் சுருக்கங்கள் இளமையிலேயே காணப்படுவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட்டு வருவதால் தான். ஏனெனில் இப்படி கண்ட உணவுகளை உண்பதால், சருமத்திற்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் போய், அதன் மூலம் சருமம் சுருக்கமடைகிறது.
ஆகவே சருமத்தை இளமையாக வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை உட்கொண்டு வாருங்கள்.
அவகேடோ
அவகேடோவில் வைட்டமின் ஈ, பி காம்ப்ளக்ஸ் மற்றும் அத்தியாவசிய ஃபேட்டி ஆசிட்டுகள் உள்ளதால், அதனை உட்கொண்டால், அதில் உள்ள வைட்டமின்கள் சருமத்தின் மென்மையை அதிகரித்து இளமையாக வெளிக்காட்டும்.
பெர்ரிப் பழங்கள்
பெர்ரி பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், அவை சரும செல்கள் பாதிப்படைவதைத் தடுத்து, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், மென்மையாகவும் வைத்துக் கொள்ளும். வேஙணடுமானால், பெர்ரி பழங்களைக் கொண்டு சருமத்திற்கு மாஸ்க் போடலாம்.
சால்மன் மீன் சால்மன் மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் வளமாக உள்ளது. இவை சருமத்தை எப்போதும் ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ளும். மேலும் இது சருமத்தில் முதுமைக் கோடுகள் மற்றும் சுருக்கங்களைத் தடுக்கும்.
தேன்
தேனை சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், அவை சருமத்தின் ஈரப்பசையை தக்க வைப்பதோடு, சருமத்தை புத்துணர்ச்சியுடனும் பொலிவுடனும் வைத்துக் கொள்ளும். அதிலும் சுத்தமான தேனில் தான் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது.
தயிர்
தயிரில் உள்ள புரோபயோடிக்ஸ், சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சக்தி கொண்டது. எனவே தினமும் தயிரை உணவில் சேர்த்து வருவதோடு, அதனைக் கொண்டு மாஸ்க் போட்டும் வாருங்கள். இதனால் முதுமைக் கோடுகள் நீங்கும்.
வால்நட்ஸ்
வால்நட்ஸில் உள்ள வைட்டமின் ஈ, முகப்பரு, சரும அரிப்பு போன்றவற்றை நீக்கும். மேலும் இதில் உள்ள செலினியம், சரும சுருக்கங்களை எதிர்த்துப் போராடும். அதுமட்டுமின்றி, இதிலும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது.
தக்காளி
தக்காளி இரத்த ஓட்டத்தை அதிகரித்து, சருமத்தை பொலிவாக்கும். அதற்கு தினமும் தக்காளியை உணவில் சேர்ப்பதுடன், அன்றாடம் அதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் அதில் உள்ள வைட்டமின் ஈ, சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும்.