28.8 C
Chennai
Monday, Jul 14, 2025
1454472250 7659
எடை குறைய

உடல் பருமனைக் குறைக்க சில வழிகள்

உங்கள் உடல் எடை சரியான அளவில் இல்லாமல் அதிகமாக உள்ளதா? கவலையே வேண்டாம்.

1. இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol), ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.

2. கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.

3. சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.

4. பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும். * எலுமிச்சைச் சாறு ஒரு கரண்டி சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது.

5. நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும்.

6. சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:

தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர்.

7. நீக்க வேண்டிய உணவுப் பொருட்கள்:

இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள். தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

1454472250 7659

Related posts

உடல் கொழுப்பை குறைக்க வேண்டுமா..? இது ஈசியான மருந்து..!

nathan

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் காலையில் குடிக்கக்கூடாத பானங்கள்

nathan

அழகான உடலமைப்பை பெறவேண்டுமா?azhagu kuripugal

nathan

உங்களுக்கு தெரியுமா உடல் பருமனை குறைக்கும் முட்டைக்கோஸ் ஜூஸ்

nathan

உடல் எடையை எளிதாக குறைக்க ஒரு அற்புதமான வழி…..

sangika

செலவே இல்லாமல் அதிகரித்த எடையை குறைக்க….

sangika

நீங்க வேகமாக எடையை குறைக்கணுமா? அப்ப தினமும் நைட் இதெல்லாம் செய்யுங்க.

nathan

வெந்தயத்தை சாப்பிட்டால் உடல் எடை வேகமாக குறையும் தெரியுமா?

nathan

உடல் எடையை குறைக்கும் சீரகம்

nathan