1454652482 7043
முகப் பராமரிப்பு

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை போக்க உதவும் கஸ்தூரி மஞ்சள்

பெண்களில் சிலருக்கு முகத்தில் முடி வளர்வது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கும். கடைகளில் நிறைய லோஷன்களும், க்ரீம்களும் கிடைக்கின்றன.

அவைகளை வாங்கி உபயோகப்படுத்தினாலும் ஒரேயடியாகத் தீர்ந்து விடாது.

கஸ்தூரி மஞ்சள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதனை வாங்கி அத்துடன் கொஞ்சம் பச்சைப் பயறு சேர்த்து வெயிலில் உலர்த்தி மிக்ஸியில் அல்லது மெஷினில் கொடுத்து நைசாக அரைத்து வைத்துக்கொண்டு தினமும் குளிக்கும்போதும், முகம் கழுவும்போதும் போட்டுத் சிறுது நேரம் கழித்து தேய்த்துக் குளிக்கவேண்டும்.

இது போட்டதுமே உடனடியாக முடி நீங்கி விடாது. நாளடைவில் தான் போகும்; ஆனால்,

புதிதாக முடிகளை வளரவிடாது. ஏதாவது லோஷன் போட்டு, இந்த அனாவசிய முடிகளைப் போக்கியபின்னர், தினந்தோறும் விடாமல் கஸ்தூரி மஞ்சள் பவுடரை முகத்தில் பூசிக் குளித்து வந்தால், நல்ல வழுவழுப்பான முக அழகைப் பெறலாம்.

தோல் நோய்கள் தீர கஸ்தூரி மஞ்சள் தூளை வெந்நீரில் குழைத்து மேல் பூச்சாகப் பூசிவர வேண்டும் அல்லது கஸ்தூரி மஞ்சள், துளசி ஆகியவற்றைச் சம

அளவாகச் சேர்த்து, அரைத்து, உடலில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்க வேண்டும்.

குளிக்கும் போது போட முடியாதவர்கள் தினமும் நேரம் கிடைக்கும் போது இந்த பவுடரை முகத்தில் போட்டு நன்கு காய்ந்ததும் முகத்தை கழுவ வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து தினமும் செய்து வர வேண்டும்.

1454652482 7043

Related posts

தேன் மற்றும் சர்க்கரை சேர்த்து ஸ்கரப் செய்ய 2 எளிய வழிகள்

nathan

மேக்கப் மூலம் ஆளுமையை எப்படி வெளிப்படுத்துவது

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சருமப் பிரச்சனைகளைப் போக்க பயன்படும் 12 வகையான இன்ஸ்டன்ட் அழகுக் குறிப்புகள்!!

nathan

உங்க புருவமும் கண் இமையும் அடர்த்தியா இருக்கனும்னு ஆசையா?அப்ப இத படிங்க!

nathan

வறண்ட சருமத்திற்கான பேஸ் மாஸ்க்

nathan

Tomato Face Packs

nathan

கன்னம் அழகாக சில குறிப்புகள்

nathan

10 நிமிடத்தில் முகத்தில் இருக்கும் நீங்கா கருமையைப் போக்கும் அற்புத மாஸ்க்!

nathan

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க

nathan