29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
pepper potato roast 05 1454659291
சைவம்

பெப்பர் உருளைக்கிழங்கு ரோஸ்ட்

இதுவரை பெப்பர் சிக்கன், பெப்பர் மட்டன் தான் சுவைத்திருப்பீர்கள். ஆனால் பலரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கைக் கொண்டு, அற்புதமான சுவையில் பெப்பர் உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்து, சாம்பார் சாதத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

இங்கு அந்த பெப்பர் உருளைக்கிழங்கு ரோஸ்ட்டை எப்படி எளிய முறையில் செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


pepper potato roast 05 1454659291
தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 3 (பெரியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.

விசில் போனதும் குக்கரைத் திறந்து உருளைக்கிழங்கை தனியாக ஒரு தட்டில் வைத்து, தோலுரித்துக் கொள்ளவும். பின் கையால் அதனை உதிர்த்து விடவும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி, உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.

அடுத்து அதில் உப்பு சேர்த்து, தீயை குறைத்து 15-20 நிமிடம் பொன்னிறமாகும் வரை கிளறி, மிளகுத் தூளைத் தூவி பிரட்டி இறக்கினால், பெப்பர் உருளைக்கிழங்கு ரோஸ்ட் ரெடி!!!

Related posts

ஆந்திரா ஸ்பெஷல் கம்பு வெஜிடபிள் சப்பாத்தி

nathan

சைனீஸ் ஃபிரைடு ரைஸ்

nathan

காலிப்ளவர் பொரியல்

nathan

சில்லி சோயா

nathan

காரசாரமான சேனைக்கிழங்கு வறுவல்

nathan

தேங்காய் பால் பட்டாணி பிரியாணி

nathan

ஆரஞ்சு தோல் குழம்பு

nathan

நீரிழிவு நோயாளிகளுக்கான… பீர்க்கங்காய் பொரியல்

nathan

செட்டிநாடு பன்னீர் மசாலா

nathan