df6220b5 53d7 42b8 8543 58de1671a1fc S secvpf
​பொதுவானவை

கம்பு வெஜிடபிள் கஞ்சி

தேவையான பொருட்கள்:

ஊறவைத்த கம்பு – அரை கப்,
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,
கடுகு, மிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்,
ஏலக்காய் – 2,
பிரியாணி இலை – 1,
வெஜிடபிள் ஸ்டாக் (கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வேகவைத்து, அரைத்தது) – 3 கப்,
நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்,
பூண்டு – 3 பல்,
உப்பு, மிளகுத் தூள் – சுவைக்கேற்ப,
எலுமிச்சைப்பழம் – அரை மூடி.

செய்முறை:

* கம்பை நன்றாகச் சுத்தம்செய்து ஊறவைக்கவும்.

* இதனுடன், வெஜிடபிள் ஸ்டாக், சீரகம், மிளகு, ஏலக்காய், பிரியாணி இலை, மஞ்சள் தூள் மற்றும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, வேகவைக்கவும்.

* பிரியாணி இலையை எடுத்துவிட்டு, வெந்த கலவையை மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.

* கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு மற்றும் பூண்டு சேர்த்துத் தாளித்து, அரைத்த சூப் கலவையில் சேர்த்துக் கொதிக்கவிடவும். தேவைப்பட்டால், சிறிது தண்ணீர் அல்லது ஸ்டாக் சேர்த்துக்கொள்ளவும்.

* இதில், எலுமிச்சைப் பழச்சாறு, உப்பு, மிளகுத் தூள் சேர்த்துப் பரிமாறவும்.

பலன்கள்: இதில் இரும்புச் சத்து மிக அதிகம். ரத்தசோகை இருப்பவர்களுக்குச் சரியான உணவு. கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிடவேண்டிய உணவு. குழந்தைகளுக்கு அடிக்கடி தரலாம்.

df6220b5 53d7 42b8 8543 58de1671a1fc S secvpf

Related posts

உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ்

nathan

செரிமானக் கோளாறை குணமாக்கும் ஓமக் கஞ்சி

nathan

காரசாரமாக பாசிப் பருப்பு குருமா

nathan

கொழுப்பை கரைத்திடும் – கொள்ளு ரசம்

nathan

பணியிடங்களில் ஏற்படும் பாலியல் தொந்தரவை சமாளிக்க வழிகள்

nathan

காதல் திருமணத்தை பெற்றோர் எதிர்க்க காரணம்

nathan

திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டுமா?

nathan

கத்திரிக்காய் தொக்கு – Brinjal Thokku

nathan

சுவையான குஜராத்தி ஸ்டைல் குடைமிளகாய் பொரியல் !

nathan