29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
sl946
சைவம்

நிமிடத்தில் செய்யலாம் கேரட் சாதம்

தேவையானவை:
கேரட்- 6
வறுத்த, தோல் நீக்கிய நிலக்கடலை- 3 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
பாசுமதி அரிசி- 4 கப்
கொத்தமல்லித்தழை- சிறிதளவு
வறுத்துத் அரைக்க:
உளுத்தம்பருப்பு- 2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு- அரை டீஸ்பூன்
மிளகு- அரை டீஸ்பூன்
சீரகம்- அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிதளவு
காய்ந்த மிளகாய்- 5
தாளிக்க:
நல்லெண்ணெய்- ஒரு டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு- ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு- ஒரு டீஸ்பூன்
பெருங்காயம்- அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிதளவு

செய்முறை:
பாசுமதி அரிசியை உதிரி உதிராக வேக வைத்து ஒரு பாத்திரத்தில் ஆற வைத்துக் கொள்ளவும்.கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும்.அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் . தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து,இத்துடன் துருவிய கேரட்டை உப்பு சேர்த்து வதக்கவும். வெறும் வாணலியில் வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு ஒரு அடிஅடித்து வைக்கவும் கேரட் வெந்ததும் இந்தப் பொடியைச் சேர்த்து, தனியே வறுத்து வைத்திருக்கும் நிலக்கடலையையும் சேர்த்துக் கிளறவும்.கேரட் கலவையைச் சிறிது ஆற விடவும், பின் ஆற வைத்திருக்கும் சாதத்துடன் சேர்த்துக் கிளறி கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
sl946

Related posts

சிறுகிழங்கு பொரியல்

nathan

பாகற்காய் தக்காளிப் புளிக்கறி

nathan

ராஜஸ்தானி வெண்டைக்காய் ஃப்ரை

nathan

காலிஃப்ளவர் ரைஸ்

nathan

பேச்சிலர் சமையல்: வெண்டைக்காய் மோர் குழம்பு

nathan

காளான் லாலிபாப்

nathan

புடலங்காய் குழம்பு செய்ய…

nathan

வாழைக்காய் பெப்பர் சாப்ஸ்

nathan

உருளை வறுவல்

nathan