முப்பது வயதிற்குள்ளேயே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்கள். இருபதுகளின் ஆரம்ப வயதில் தான் ஆண், பெண் இருவரும், 100 சதவீதம் குழந்தைப் பேறுக்கான உடல் மற்றும் மனத் தகுதிகளோடு இருக்கின்றனர். இந்த வயதில் ஒரு பெண்ணிற்கு, 10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் முட்டைகள் வரை கருவில் உருவாகிறது.
இருபதுகளின் கடைசிகளில், பெண்களுக்கு கருத்தரிப்பதற்கான உடல் வலிமை குறைய ஆரம்பித்துவிடும். ஆயினும் கருத்தரிக்க, 75 சதவீத வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், ஆணின் விந்தணுவின் உற்பத்தியும் வேகமும் குறைவதில்லை. முப்பதுகளின் ஆரம்ப வயதில் இருந்து ஒவ்வொரு மாதவிடாய் காலத்திலும், பெண்களின் கருமுட்டைகளின் எண்ணிக்கை, ஆயிரக்கணக்கில் குறையத் துவங்கும். இதுதான் பெண்களுக்கு. 30 வயதில், குழந்தைப் பேறுக்கான வாய்ப்புகள் குறைய காரணம். இயல்பாகவே, 40 முதல் 45 வயதிற்குள், பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாயே நின்று விடுகிறது. அப்படியே கருமுட்டை உருவாகினாலும், வலிமை குறைவாக தான் இருக்கும்.
அதேநேரம், ஆணின் விந்து உற்பத்தியும், வேகமும் குறைந்து விடும். அதனால் நாற்பதுகளில் குழந்தைப் பேறு என்பது மிகவும் சிரமம். 45 வயதிற்கு மேல், மிக சில பெண்களுக்கு மட்டுமே, குழந்தைப் பேறு வாய்க்கிறது. அதுவும், சிலருக்கு சரியான மருத்துவ சிகிச்சைகளின் மூலமாக கருத்தரிக்க செய்கின்றனர். கருமுட்டையின் வலுவின்மையும், மாதவிடாய் முடியும் தருவாய் என்பதாலும், கருத்தரிப்பில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், ஆணின் விறைப்பு தன்மை மற்றும் வேகம் மிகவும் குறைந்திருக்கும். இதனால், குழந்தைப் பேறு அடைவது மிக மிக குறைகிறது.