இன்றைய நவீன உலகில் புகைப்பிடிப்பது என்பது ஓர் ஃபேஷனாகிவிட்டது. ஒருவர் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டால், அதிலிருந்து வெளிவருவது என்பது அவ்வளவு எளிதல்ல. அதற்காக இப்பழக்கத்தைக் கைவிடாமல் இருக்க முடியாது.
இதயம் பாதிக்கப்படும்
புகைப்பிடிப்பதால் இதயம் மற்றும் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, அதனால் கரோனரி இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம், இரத்த நாளங்கள் பாதிக்கப்படும் மற்றும் மூளைக்கு செல்லும் இரத்தக்குழாய்கள் பாதிக்கப்படும்.
நுரையீரல் பாதிப்பு
ஒவ்வொரு முறை சிகரெட் பிடிக்கும் போதும், நுரையீரல் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகும். அதிலும் நீண்ட நாட்களால் இப்பழக்கம் இருப்பின், மூச்சு விடுவதில் சிரமம், ஆஸ்துமா, காசநோய், நுரையீரல் அழற்சி போன்ற பிரச்சனைகளால் அவஸ்தைபடக்கூடும்.
கண் பிரச்சனைகள்
புகைப்பிடிப்பதால் இதயம், நுரையீரல் மட்டுமின்றி கண்களும் பாதிக்கப்படும். ஆய்வு ஒன்றில் புகைப்பிடிப்பதற்கும், கண் புரை, கண் நரம்பு சோதம், குருட்டுத்தன்மை போன்றவற்றிற்கும் தொடர்புள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஏராளமான புற்றுநோய்
வரும் சிகரெட்டில் 7000 கெமிக்கல்கள் உள்ளன. அதில் 70 வகையான கெமிக்கல்கள் புற்றுநோயை உண்டாக்குபவை. அதில் பலருக்கும் தெரிந்த ஒன்று நுரையீரல் புற்றுநோய். ஆனால் சிகரெட் உடலில் வேறுசில பகுதிகளிலும் புற்றுநோய்களையும் உண்டாக்கும். அதில் உணவுக்குழாய், வாய், உதடு, வயிறு, கல்லீரல், சிறுநீரம், கணையம், சிறுநீர்ப்பை, குடல், கருப்பை வாய் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
குறிப்பு
இவ்வளவு பிரச்சனைகளை வரவழைக்கும் சிகரெட்டைப் பிடித்து ஏன் உங்கள் வாழ்க்கையை பாழாக்குகிறீர்கள். உங்களுக்கு சிகரெட் பழக்கத்தைக் கைவிட வேண்டுமா? அதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டும் பலன் இல்லையா? அப்படியெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ரெசிபியை முயற்சி செய்யுங்கள்.
தேவையான பொருட்கள்
கிரேப் ஃபுரூட் – 1/2
ஆரஞ்சு – 1/2
சீமைச்சாமந்தி டீ – 20
மிலி ஜோஜோபோ ஆயில் – 30 கிராம்
ஆலிவ் ஆயில் – 30 கிராம்
தேங்காய் எண்ணெய் – 30 கிராம்
கற்பூரவள்ளி – 5 கிராம்
செய்முறை
முதலில் கிரேப் ஃபுரூட் மற்றும் ஆரஞ்சு பழத்தை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் இந்த சாற்றினை ஊற்றி, அத்துடன் அனைத்து பொருட்களையும் சேர்த்து ஒருபடித்தான கலவையில் நன்கு கலக்க வேண்டும். பிறகு அதனை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் ஊற்றி அடைத்துக் கொள்ளவும்.
எப்படி பயன்படுத்துவது?
இந்த கலவையை சிகரெட் பிடிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும் போது, மூக்கின் அடியில் அல்லது சில துளிகளை காட்டனில் ஊற்றி, அதனை நன்கு ஆழமாக சுவாசிக்க வேண்டும். இப்படி செய்கையில் அவ்வெண்ணம் நீங்கும்.