இன்று வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே இந்த வெப்பமான சூழலில் நீண்ட நேரம் குளிப்பது மிகவும் அவசியம். குளித்தால் அன்றைய மன அழுத்தமும், வேலையின் சோர்வும் குணமாகும்.
உங்கள் உடலின் நீரேற்றத்தை அதிகரிக்கவும், குளிர்ச்சியடையவும் வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்ய வேண்டும். நமது சருமத்தை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். அதனால் சருமம் மிருதுவாகும். ஆனால் இந்த கோடை காலத்தில், நமது பரபரப்பான பசியை அமைதிப்படுத்தவும், நாம் தேடும் புத்துணர்ச்சியூட்டும் அனுபவத்தை வழங்கவும் சில பரிந்துரைகள் உள்ளன.
1. ஷவர் ஜெல்கள்
நாம் கோடையில் இருப்பதால், நமது உடலுக்கு நீா்ச்சத்தை அளிக்கக்கூடிய பொருள்களைக் கொண்டு உடலைக் கழுவ வேண்டும். அவை நமது சருமத்திற்கு புதுப் பொலிவையும், நமது உடலுக்கு புத்துணா்ச்சியையும் அளிக்கும். சருமத்தை மென்மையாக்குவதற்கு மிகவும் சாியான பொருள்களைத் தோ்ந்தெடுத்து அவற்றைக் கொண்டு சருமத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
குளிக்கும் போது கூல் ஷவர் ஜெல்லைப் பயன்படுத்தலாம். அது நமது சருமத்தைத் தூண்டி, மீட்டெடுத்து, நமது சருமம் புத்துயிா் பெற உதவி செய்யும். அதோடு சருமத்திற்குத் தேவையான குளிா்ச்சியையும் வழங்கும். அதாவது வியா்க்கும் கோடையில், நமது சருமமானது 3 டிகிாி வெப்பநிலையில் இருப்பதைப் போன்ற உணா்வை ஏற்படுத்தும். மேலும் நமது ஒவ்வொரு உணா்வையும் தூண்டி, நாம் குளித்து முடித்தவுடன் நமக்கு மகிழ்வை ஏற்படுத்தும்.
2. உடலைத் தேய்க்கும் பொருள்களைக் கொண்டு தேய்த்தல்
உடலைத் தேய்க்கும் பொருள்களைக் கொண்டு நமது சருமத்தை மென்மையாகத் தேய்த்தால் அல்லது நீவிவிட்டால், நமது சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும் மாறும். அவை நமது சருமத்தின் மேல் பகுதியை உாித்துவிடும். அதனால் கோடை காலத்தில் ஏற்படக்கூடிய சரும வறட்சி பிரச்சினை குறையும். மேலும் அவ்வாறு மெதுவாக நீவிவிடும் போது நமது உடலுக்கும், மனதிற்கும் ஒரு தளா்வு கிடைக்கும். எனினும் உடலைத் தேய்ப்பதற்கு மிருதுவான பொருள்களையே தோ்ந்தெடுக்க வேண்டும். சருமத்தில் காயங்களை ஏற்படுத்தக்கூடிய பொருள்களைத் தவிா்க்க வேண்டும்.
3. காய்களால் செய்யப்படும் லூஃபாக்களைப் பயன்படுத்தல்
பொதுவாக கோடையில் சருமம் மிகவும் பொலிவற்றுக் காணப்படும். இந்நிலையில் காய்களால் செய்யப்படும் லூஃபாக்களைக் கொண்டு சருமத்தைத் தேய்த்தால், அது சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்ற உதவும். மேலும் லூஃபாக்களைக் கொண்டு சருமத்தைத் தேய்த்தால், சருமத்தில் கோடுகளை அல்லது சுருக்கங்களை ஏற்படுத்தக்கூடிய சரும உலா் திட்டுகளை அகற்றலாம். அதனால் சருமத்தின் செல்களில் மீள் உருவாக்கம் நடைபெறும். அதோடு ஆரோக்கியமான மற்றும் புத்துணா்ச்சியுடன் கூடிய சருமம் கிடைக்கும்.
4. நறுமண எண்ணெய்களை சோ்த்துக் கொள்ளுதல்
கொளுத்தும் பகல் நேரத்தில் வேலை செய்துவிட்டு, மாலையில் குளிக்கும் போது லாவண்டா் அல்லது ரோஸ்மோி போன்ற நறுமண எண்ணெய்களைச் சோ்த்துக் கொள்ளலாம். அவை நமக்கு மன அழுத்தத்தைக் குறைத்து ஒரு இனிமையானத் தளா்வைத் தரும். குளிக்கும் போது நறுமண எண்ணெய்களை பயன்படுத்துவது என்பது கேக் மீது ஐஸ் வைப்பதற்கு சமம் ஆகும். அவை பல நன்மைகளைத் தரும். அதாவது முடி வளா்வதற்கு உதவும். சருமம் ஆரோக்கியம் பெற உதவும். அதோடு நமது குளியலுக்கு ஒரு ஆடம்பரத்தைத் தரும்.
5. மாய்ஸ்சுரைசர்களைப் பயன்படுத்துதல்
நமது உடலுக்கு ஈரப்பதம் தேவைப்படாது என்று நாம் நினைக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால், எந்த பருவ காலமாக இருந்தாலும், நமது உடலுக்கு மற்றும் மிருதுவான சருமத்திற்கு கண்டிப்பாக ஈரப்பதம் தேவை. பொதுவாக ஆடை அணிவதற்கு முன்பாகவோ அல்லது ஆடை அணிந்த பின்னரோ மக்கள் ஈரப்பதம் கொடுக்கும் மாய்ஸ்சுரைசர்களைத் தேய்ப்பா். ஆனால் அவற்றைத் தேய்ப்பதற்கு மிகவும் சாியான நேரம் எதுவென்றால் குளித்ததற்குப் பின்பு ஆகும்.
ஈரப்பதம் கொடுக்கும் மாய்ஸ்சுரைசர்களைத் தேய்த்த பின்பு அவற்றை முற்றிலுமாகத் துடைத்துவிடக்கூடாது. நமது சருமத்தில் சிறிது தங்கி இருக்குமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவை தமது வேலையைச் செய்ய முடியும். மேலும் நமது சருமம் ஆரோக்கியமான திரவத்தை உறிஞ்சுவதற்கு உதவி செய்யும். எடை குறைந்த மாய்ஸ்சுரைசர்களைத் தோ்ந்தெடுத்து அவற்றை நமது சருமத்தில் தேய்க்க வேண்டும். அது குளித்தபின் நமது ஒரு புத்துணா்ச்சியை வழங்கும்.