25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
13384866 2373 4851 84b4 b5c64487cb22 S secvpf
சைவம்

பார்லி வெஜிடபிள் புலாவ்

தேவையான பொருட்கள் :

பார்லி – 100 கிராம்,
கேரட், பீன்ஸ், பட்டாணி எல்லாம் சேர்த்து – கால் கிலோ,
வெங்காயம் – 1,
நாட்டுத் தக்காளி – 1,
பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 1,
தயிர் – 1 டேபிள்ஸ்பூன்,
புதினா, கொத்தமல்லி – 1 கைப்பிடி,
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
இஞ்சி-பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை :

* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.

* புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி, பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளித்த பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்துக் சிறிது வதக்கிய பின்னர் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் அடுத்து அதில் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தயிர் சேர்த்து மேலும் வதக்கவும்.

* எண்ணெய் ஓரங்களில் வரும்போது, பார்லியை சேர்த்து 5 நிமிடங்களுக்கு வதக்கவும்.

* ஒன்றுக்கு 2 ( 1:2 ) தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து, கொதிக்கும் போது புதினா, கொத்தமல்லி, கீறிய பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி, குக்கரில் வைத்து வெயிட் போட்டு, குறைந்த தணலில் வைக்கவும்.

* விசில் வர வேண்டாம். 10 நிமிடங்கள் வைத்து எடுத்து சூடாகப் பரிமாறவும்.

* இந்த பார்லி புலாவ் உணலுக்கு மிகவும் நல்லது.
13384866 2373 4851 84b4 b5c64487cb22 S secvpf

Related posts

வீட்டிலேயே செய்யலாம் கோவில் புளியோதரை

nathan

சூப்பரான பாகற்காய் ப்ரை

nathan

பேச்சுலர்களுக்கான சிம்பிளான தவா மஸ்ரூம்

nathan

சுவையான வெண்டைக்காய் மோர் குழம்பு

nathan

நெல்லிக்காய் சாதம்

nathan

தயிர் உருளை

nathan

செட்டிநாடு காளான் மசாலா

nathan

வெந்தய சாதம்

nathan

பாலக் கிச்சடி

nathan