22.9 C
Chennai
Monday, Jan 27, 2025
1 turmeric 1654604562
முகப் பராமரிப்பு

முகத்திற்கு மஞ்சளை பயன்படுத்தும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

மஞ்சள் பழங்காலத்திலிருந்தே அழகு சாதனப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மஞ்சளில் உள்ள மருத்துவ குணங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. சமையலில் மஞ்சள் எப்படி முக்கியமோ அதே போல பெண்களின் அழகிலும் மஞ்சள் முக்கிய பங்கு வகிக்கிறது. இது போன்ற மஞ்சள் சரும பிரச்சனைகளை போக்கவும், முகத்தின் பொலிவை அதிகரிக்கவும் பெரும்பாலானோர் இதை பயன்படுத்துகின்றனர். ,

மஞ்சளின் மருத்துவ குணங்கள்
மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-டானிங் பண்புகள் அதிகளவில் நிறைந்துள்ளன. ஆகவே இது முகப் பருக்கள், சரும கருமை, மற்றும் சரும சுருக்கங்கள் போன்ற சரும பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். என்ன தான் மஞ்சள் மருத்துவ குணம் நிறைந்த பொருளாக இருந்தாலும், அதைப் பயன்படுத்துவதில் செய்யும் தவறுகள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஆகவே மஞ்சளை சருமத்திற்கு பயன்படுத்தும் போது ஒருசில விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். இப்போது அவை என்னவென்பதைக் காண்போம் வாருங்கள்.

முகத்தை நன்கு கழுவவும்

முகத்திற்கு மஞ்சளைப் பயன்படுத்துபவர்கள் பலரும் முகத்தில் உள்ள மஞ்சளை நன்கு கழுவுவதில்லை. முகத்தில் ஆங்காங்கு மஞ்சள் இருக்கும். இப்படியே முகத்தில் மஞ்சளை விட்டுவிட்டால், பின் அது முகத்தில் எரிச்சல் மற்றும் அரிப்புக்களை ஏற்படுத்திவிடும். ஆகவே முகத்திற்கு மஞ்சளை பயன்படுத்தி முகத்தைக் கழுவிய பின்னர் மறக்காமல் முகத்தில் மாய்ஸ்சுரைசரைத் தடவுங்கள்.

சோப்பை தவிர்க்கவும்

முகத்திற்கு மஞ்சளை பயன்படுத்திய பின்னர், பலரது முகத்தில் அதிக மஞ்சளை காணலாம். இந்த மஞ்சளை நீக்க பலரும் முகத்திற்கு சோப்பு அல்லது ஃபேஸ் வாஷைப் பயன்படுத்துவார்கள். ஆனால் இப்படி செய்தால், முகச் சருமம் கருமையாக ஆரம்பிக்கும். எனவே இம்மாதிரியான தவறை ஒருபோதும் செய்துவிடாதீர்கள்.

மஞ்சள் ஃபேஸ் பேக்

முகத்திற்கு பொலிவை இயற்கையாக கொண்டு வருவதற்கு மஞ்சள் ஃபேஸ் பேக் உதவி புரியும். ஆனால் சில பெண்கள் மஞ்சளுடன் பலவிதமான பொருட்களைக் கலந்து, முகத்திற்கு ஃபேஸ் பேக் போடுவார்கள். இப்படி செய்வதால் முகச் சருமம் தான் அதிக சேதமடையும். மஞ்சள் ஃபேஸ் பேக்கை போட விரும்புபவர்கள், மஞ்சள் தூளுடன், ரோஸ் வாட்டர் மற்றும் பால் கலந்து முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம். இது நல்ல பலனைத் தரும்.

நீண்ட நேரம் மஞ்சளை ஊற வைப்பது

பெரும்பாலான பெண்கள் முகத்திற்கு மஞ்சள் ஃபேஸ் பேக்கை போட்டுக் கொண்டு வீட்டின் பிற வேலைகளை செய்வதுண்டு. இப்படி செய்யும் போது பல பெண்கள் ஃபேஸ் பேக்கை நீண்ட நேரம் ஊற வைப்பார்கள். இப்படி நீண்ட நேரம் மஞ்சள் முகத்தில் இருந்தால், அது அரிப்பு, எரிச்சல் மற்றும் மஞ்சள் கறைகளை முகத்தில் படிய வைக்கும். ஆகவே முகத்திற்கு மஞ்சள் ஃபேஸ் பேக் போட்டால், மஞ்சள் காயந்த உடனேயே நீரால் கழுவிட வேண்டும்.

Related posts

கொரியாபொண்ணுங்க எப்பவும் இளமையாவே இருக்காங்களே எப்படி?இதுதான் சீக்ரெட்டாம்!

nathan

முகத்தில் வரும் முகப்பரு, கட்டி, கரும்புள்ளிகள் நீங்க டிப்ஸ்

nathan

உங்களுக்கு விரைவில் தடிமனான புருவம் கிடைக்க டாப் 7 கைவைத்தியங்கள்!! தூங்கறதுக்கு முன்னாடி இத செய்ங்க!!

nathan

நம்முடைய வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்தே இமீடியட் சிகப்பழகு பெற முடியும்.

nathan

வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த கற்றாழை ஜெல் மாஸ்க் போடுங்க…

nathan

கர்ப்ப காலத்தில் முகத்திற்கு எந்த மாதிரியான பேஸ்பேக் போடலாம்?

nathan

முகப் பொலிவு பெற

nathan

மங்கு குணமாகுமா?

nathan

முகத்தை கழுவும்போது இதெல்லாம் நீங்கள் செய்கிறீர்களா?

nathan