26.3 C
Chennai
Monday, Dec 23, 2024
2 1542102613
மருத்துவ குறிப்பு

பெண்கள் கர்ப்பமடைய சரியான வயது எது?

கர்ப்பம் என்பது பெண்களுக்கு மிக முக்கியமான காலம். காரணம், இந்த கருவுறுதல் ஏற்பட பெண்ணின் மனமும் உடலும் இணக்கமாக இருக்க வேண்டும்.

அப்போதுதான் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். எனவே, ஒரு பெண்ணின் கருவுறுதலுக்கு வயது மிகவும் முக்கியமானது. இதில் பல நன்மை தீமைகள் உள்ளன. அதைச் சுருக்கமாகக் கூறுகிறது இந்தக் கட்டுரை.

வயது 20-24
இந்த காலக்கட்டத்தில் மாதவிடாய் சுழற்சி சரியாக இருக்கும். இந்த காலகட்டத்தில் கர்ப்பம் தரித்தால் 20% ஹைபர்டென்ஷன் பாதிப்பு மற்றும் கர்ப்ப கால நீரிழிவு அபாயம் வருவது குறையும்.

உணர்ச்சி நிலை

ஆனால் இந்த காலகட்டத்தில் உடம்பு ரீதியான பிரச்சினையால் கர்ப்பம் சிக்கலாக கூடும். இந்த வயதில் கல்யாணம், வாழ்க்கையில் செட்டில் ஆகுவது போன்ற கமிட்மெண்ட்க்கு முன்னாடி கர்ப்பம் தரிப்பது என்பது சிரமமான காரியம்.

குழந்தைக்கு வரும் அபாயம்

இந்த காலத்தில் 9.5% கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் குழந்தை பிறப்பு குறைபாட்டால்(1667 ல் 1) அல்லது குரோமோசோம் குறைபாட்டில் (526 ல் 1)பிறக்க வாய்ப்புள்ளது.

 

வயது 25-29

உடல்நிலை

உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கம் உங்க் கருத்தரித்தலை ஆரோக்கியமாக்கும். இந்த வயது தான் கருத்தரிக்க சரியான வயது. மார்பக மற்றும் கர்ப்ப பை புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

உணர்ச்சி நிலை

இந்த காலகட்டத்தில் வேலை அழுத்தம் மற்றும் திருமண அழுத்தம் எதுவும் இல்லாமல் இருப்பதால் துணைகள் பெற்றோராக சரியான வயது.

குழந்தைக்கு வரும் அபாயம்

கருச்சிதைவு 10%வர ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் குழந்தை வளர்ச்சி குறைபாட்டால்1250 ல் 1) அல்லது குரோமோசோம் குறைபாட்டில் (476 ல் 1)பிறக்க வாய்ப்புள்ளது. ஆனால் இந்த வயதில் பாதிப்பு குறைவு தான்.

வயது 30-34

உடல் நிலை

வயது முப்பதை அடையும் போது கருவுறுதல் திறன் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்து விடும். எனவே இதற்கு சிகச்சை எடுத்தால் கருவுறுதல் சாத்தியம். செயற்கை முறை கருத்தரிப்பு 25-28% ஆக இருப்பது 40 வயதை அடையும் போது 6-8 % ஆக குறைந்து விடும். இந்த 20 ஆம் நூற்றாண்டில் இருந்து சிசேரியன் பண்ணிக்கிற பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உணர்ச்சி நிலை

இந்த வயதில் குழந்தையை வளர்ப்பது எளிதாக இருக்கும். வாழ்க்கையில் ஓரளவுக்கு செட்டில் ஆகி விடுவதால் பெற்றோராக இருப்பதற்கு நேரம் கிடைக்கும்.

குழந்தைக்கு வரும் அபாயம்

கருச்சிதைவு ஏற்பட 11.7%வரை வாய்ப்புள்ளது. கழுத்தை வளர்ச்சி குறைபாடு (952 ல் 1)குரோமோசோம் குறைபாடு (385 ல் 1)ஆக ஏற்பட வாய்ப்புள்ளது.

 

வயது 35-45

உடல் நிலை

38 வயதில் மாதவிடாய் நிற்கும் நிலை உருவாகி விடும். இதனால் இந்த வயதில் குழந்தை பிறப்பு என்பது மிகவும் சிரமமான ஒன்று. இரத்த அழுத்தம் இரண்டு மடங்கு உயரும், ஹைபர்டென்ஷன் 10-20% வரை அதிகமாகும், கர்ப்ப கால நீரிழிவு நோய் 2-3 மடங்கு வர வாய்ப்புள்ளது. சிசேரியன் அறுவைச் சிகிச்சை வர வாய்ப்புள்ளது.

உணர்ச்சி நிலை

இந்த வயதில் கருத்தரிப்பு ஒரு வித பயத்தை ஏற்படுத்தும். எனவே ப்ரீநாட்டல் ஸ்கிரீனிங் மற்றும் அமினோசென்டஸிஸ் முறைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

குழந்தைக்கு வரும் அபாயம்

இரட்டை அல்லது மூன்று குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது. கருச்சிதைவு ஏற்பட 18%வாய்ப்புள்ளது.

MOST READ: மோதிரம் அணியும் இடம் பச்சையாக மாறுவது ஏன்? அதனால் ஆபத்தா? எப்படி சரிசெயய்லாம்?

40 வயதிற்கு மேல்

உடல் நிலை

இது கருவுற சிரமமான வயதாகும். 25% சிகச்சை எடுக்க வேண்டிய நிலை இருக்கும். அதிக இரத்த அழுத்தம், டயாபெட்டீஸ், குறைப்பிரசவம் போன்ற பாதிப்புகள் உண்டாக வாய்ப்புள்ளது.

உணர்ச்சி நிலை

இந்த நிலையில் துணைக் பொருளாதார ரீதியாக செட்டில் ஆகி விடுவதால் எந்த வித மன அழுத்தமும் இல்லாமல் குழந்தைகளை வளர்க்க முடியும். ஆனால் அவர்களின் உடல் ஆற்றல் குறைந்து காணப்படும்.

குழந்தைக்கு வரும் அபாயம்

40 வயதில் 24%ம், 43 ல் 38%ம், 44 ல் 55% கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைக்கு டைப் 1 டயாபெட்டீஸ் மற்றும் இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. கருவுறுதல் திறன் (100 ல் 1 பேருக்கு) மட்டுமே இருக்கும். குழந்தை வளர்ச்சி குறைபாடு (40 ல் 1 பேருக்கும்), 45 வயதில் (30 ல் 1 பேருக்கும்) ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த நவீன காலத்தில் தம்பதிகள் தங்களின் பொருளாதார நிலை, வேலை நிலையைக் கொண்டு கருவுறுதலை தீர்மானிக்கின்றனர்.இருப்பினும் இதன் நன்மை தீமைகளை அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு கருவுறுதலை திட்டம் போடுவதை நல்லது. இது உங்களுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறப்பை கொடுக்கும்.

Related posts

பெண்கள் 45 வயதுக்கு முன்னரே கருப்பையை எடுப்பது நல்லதா?

nathan

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

nathan

இளம் வயதில் தந்தையாகும் ஆண்களுக்கு நடுவயதில் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகள்!!!

nathan

குண்டான பெண்களை விரும்பும் ஆண்கள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மார்பக புற்றுநோய் ஏற்பட இதுவும் முக்கிய காரணம்

nathan

பெண்களே! உங்க அந்தரங்க பகுதியை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்

nathan

இதை கட்டாயம் படியுங்கள் கருத்தரித்தலுக்கு தடையாக இருக்கும் கருப்பை நீர்க்கட்டிகள்

nathan

உடலுக்கு பலம் தரும் சர்க்கரைவள்ளி

nathan

பீட்ரூட்டின் சில மருத்துவப் பயன்

nathan